இப்போது நடக்கும் நாடகத்தின் மூலம், இவர்களின் நோக்கம் - குப்பை கொட்ட இடம் வழங்குவதல்ல; மாறாக, பயோகேஸ் திட்டத்தைக் கடத்திக் கொண்டு போய் அப்பகுதியின் நில விலையை தாறுமாறாக உயர்த்துவதுதான் என்பது - மெகாவின் 2013ஆம் ஆண்டு நோட்டீஸைப் பார்த்தவர்களுக்குப் புரியும். (பார்க்காதவர்கள் செய்தி எண் 12183இல் பார்க்கவும்.)
சாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்கள் கீழ்க்காணுமாறு கருத்து பதிந்துள்ளார்:
//ஆற்காட்டில் குப்பை கொட்டுமிடம் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆனால், நமதூரில், 5 கி.மீ தாண்டினாலே அடுத்த ஊர். அந்த ஊரில் நமதூர் குப்பையைக் கொட்ட அனுமதிப்பார்களா? C&P //
வேடிக்கை என்னவென்றால், பயோகேஸ் ப்ளாண்ட்டும், குப்பை கொட்டும் இடமும் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டும் என இவர் இதுநாள் வரை கூறி வந்தார். அது பொய் என்று ஆற்காடு நகராட்சி தெளிவுபடுத்துகிறது.
இந்த உண்மையை மறைக்கவே இந்த பதிவு. நான் சொல்வது சரிதானா காக்கா?
//அவர்களிடம் நான், குப்பை கொட்டும் dump yard பக்கத்தின் நிலத்தின் விலை ஏறும் என்ற concept பற்றி கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. இந்த பிரசுரம் உட்பட. C&P //
உண்மையில் 278இல் குப்பை கொட்டப்படப் போகிறது என்றால், அதனை ஒட்டியுள்ள இடங்கள் விற்பனையாகாதுதானே? பின்னே ஏன் buffer zoneக்கு இவ்வளவு எதிர்ப்பு? பேசாமல் அதற்கும் இடத்தை விட்டுவிட்டால், பிரச்சினை தீர்ந்ததே...? மக்களே! இப்போது புரிகிறதா இவர்களின் நாடகம்???
//ரூ. 5 லட்சத்தில் இந்த இடத்துக்கு அரை கி.மீ மட்டுமே சாலை அமைக்க (அதுவும் சரல் சாலை) ஆணையர் அனுமதி கோருகிறார் C&P//
இதைக் கூறும் சாளை அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் காக்கா, உண்மையில் அந்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டுதான் சொல்கிறாரா என்ற சந்தேகம் இப்போது எனக்கு எழும்புகிறது.
DCW கழிவுகள் கடலில் சேர்க்கப்படும் இடம் என்பதால் நான் பலமுறை இந்த இடத்திற்குச் சென்றுள்ளேன். வெகு தூரத்தில் தார் சாலை முடிந்து, பல கிலோ மீட்டருக்கு - மண் சாலைதான். நீங்கள் சொல்லும் - சரல் சாலை, முன்னாள் தலைவர் தந்த இடத்தில் இருந்து, மண் சாலையை இணைக்க மட்டும்தான்.
குப்பை கொட்டத் துவங்கினால், தினமும் பல முறை இச்சாலையை குப்பை வாகனங்கள் பயன்படுத்தும். பயோகேஸ் பிளாண்டுக்கு தினமும் தனியாக வண்டிகள் வரும். மண் சாலையில் இந்த வாகனப் போக்குவரத்து சாத்தியமா? பார்த்துக்கொண்டே இருங்கள்! அடுத்ததாக தார் சாலை கோரிக்கை வருகிறதா இல்லையா என்று!
அது மட்டுமல்ல!
“இரவில் மட்டும் இயங்கும் பயோகேஸ் பிளான்ட், காட்டில் தனியாக உள்ளது. ஆபத்து, பாதுகாப்பு இல்லை; பணியாளர்கள் செல்ல பயப்படுகிறார்கள்; கொம்புத்துறையைத் தாண்டி, பயோ காஸ் பிளான்ட் வரை தெரு விளக்குகள் இல்லை” என்றெல்லாம் புதிய கோரிக்கைகள் பிறக்கும். அதன் தொடர்ச்சியாக, புதிதாக - கொம்புத்துறை முடிவில் இருந்து, தற்போது காலியாக உள்ள சாலை வழியாக தெரு விளக்குக் கம்பங்கள் நட்டப்படும். நிலமும் கொள்ளை விலையில் படு ஜோராக நடக்கும். இதுதான் இவர்களின் திட்டம்! மக்கள் வரிப்பணத்தில் நிலச்சுவான்தார்களுக்கு (மட்டும்) லாபம். இதுதான் இவர்களின் நோக்கம்.
ஏமாந்தது போதும் மக்களே. சட்டப் படி குப்பைகள் கொட்ட BUFFER ZONE அவசியமா, இல்லையா? BUFFER ZONE இல்லாமல், குப்பைகள் கொட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்குமா? இந்த கேள்விகளுக்கான பதிலில்தான், இவர்களின் கபட நாடகத்தின் உண்மை மறைந்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross