மெகா பருப்பு எங்க கிட்டெ வேகாது.... posted byஹிஜாஸ் மைந்தன். (சிங்கப்பூர்)[07 January 2015] IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 38770
அப்ப அது பஞ்சாயத்து... புள்ளி மாத்துறதுக்கும், பைப்புக்கு பணம் கட்டுறதுக்கும், கல்யாணம் கந்தூரின்னு வந்தா ரோட்டோரம் சுண்ணாம்பு போடுறதுக்கும் கானுக்கு பூச்சி மருந்தடிக்கிறதுக்கும், வீட்லெ விசேஷம்ன்னு வந்தா குப்பை கூளங்களை அள்ளுறதுக்கும்,தண்ணி (மாட்டு) வண்டிக்கு சொல்லுறதுக்கும், அடிபைப்லெ வழக்கத்துக்கு மாறாக தண்ணி வராட்டாலும் சரி, மலேரியா டையரியான்னு ஏதாச்சும் நோய் நொடி வந்ததுனுன்னாலும் சரி பறை அடிச்சு சொல்லுறதுக்கும் மட்டுந்தான் பஞ்சாயத்து போர்டுன்னு நாம நெனச்சிட்டிருந்த காலம்.
நாம நேரா அங்கே போறதுகூட கிடையாது. அதுக்குன்னு ஊர்லெ சில புரோக்கர்ங்க இருப்பாங்க அவங்க கமிஷன் வாங்கிட்டு நம்ம வேலையெ முடிச்சு தருவாங்க. நல்லவங்க ஊர் பெரியவங்க யாராச்சும் ஒருத்தர் சும்மா பேருக்காக தலைவரா இருப்பாங்க. பஞ்சாயத்து போர்டுலெ யாரு இருக்காங்க என்ன பண்ணுறாங்க அரசு திட்டங்கள் என்ன? சலுகைகள் என்ன? ஒரு ஈரமண்ணும் நமக்குத் தெரியாது. கூட்டம் நடந்திச்சா? தீர்மானம் போட்டாங்களா? ஆதரவு எத்தனை? எதிர்ப்பு எத்தனை? அதுக்கும் நமக்கு சம்பந்தமே இல்லைங்க...
மெம்பரா இருந்தவங்க ஓரளவுக்கு சம்பாதிச்சாங்க அரசியல் பலம் கொண்டவர்கள் துணைத் தலைவரா இருப்பாங்க வார்டு கவுன்சிலருக்கு வருமானமே பைப்லைன் கனெக்ஷன்லெதாங்க. பஞ்சாயத்துக்குப் போனாலெ பணம் கொடுத்தா தான் வேலை நடக்கும்ங்கிறது எழுதப்படாத சட்டம்ங்க. இப்படி பஞ்சாயத்து போர்டை போலீஸ் ஸ்டேஷன் போல நெனச்சு அவ்ளோ சீக்கிறமா யாரும் அங்கே போறதில்லீங்க...
எழவு கொடுத்த எலக்ஷன்ன்னு மூனு வருஷத்துக்கு முன்னாடி ஒன்னு வந்திச்சுங்க.. ஊர்லெ இருக்கிற ஒரு அமைப்பு (ஊரையே கட்டிக்காக்குறதா இப்ப வரைக்கும் நாங்க நெனச்சிட்டிருக்கிற அமைப்பு) ஏதோ முச்சரிக்கை, முந்திரி பருப்புன்னு இந்த ஆபிதா அம்மாவை கையெழுத்துப் போடச் சொன்னாங்க அந்த புள்ள படிச்ச புள்ள பாருங்க அப்படியெல்லாம் போட மாட்டேன்னு வெளியெ கிளம்பிட்டாங்க.. வழக்கமா ஒரு டம்மி பீஸை செலக்ட் பண்ணி அவங்களுக்கு ஓட்டுப் போடச் சொன்னாங்க அப்ப வந்துச்சு வினை! மெகா பகான்னு ஏதோ ஒரு படை கிளம்பிச்சு கூட்டம் போட்டாங்க.. பலர் ஆட்டம் கண்டாங்க தலைவருக்கு போட்டி போடுறவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பப்ளிக்கா வெளக்கம் கேட்டாங்க ஆங்கே ஆபிதா மட்டும் வந்து பேசினாங்க ஊர் மக்களுக்கு புரிய வச்சாங்க ஓஹோன்னு ஜெயிச்சாங்க.
அதுக்கப்புறம் தான் சனி சந்து பொந்துன்னு பார்க்காம வந்து நின்னு சிந்து பாட ஆரம்பிச்சுது... எங்களெ மதிக்காம எங்க ஜமாத்துக்களை எதிர்த்து ஜெயிச்ச தலைவிக்கு கொடச்சல் கொடுக்குறதுக்குன்னே நாங்க தயாராயிட்டோம். அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு நாங்க எதிர்ப்பு தெரிவிப்போம். மிரட்டுனோம் உருட்டுனோம், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இப்ப மட்டும் என்னங்க ஏக்கர் கணக்கா அரசாங்கத்துக்கு நிலம் இருந்தாலும் நாங்க அங்கே பயோகேஸை வர விடமாட்டோம். நிலத்துக்கு மதிப்பு ஏறுனாலும் சரி, நீளமா தார் ரோடு போட்டாலும் சரி எங்களுக்கு அதப்பத்திய கவலையே இல்லீங்க. DCW விரிவாக்கத்துக்கு அந்த அம்மா எதிர்ப்பு தெரிவிசாங்கன்னா அதை நாங்க ஆதரிப்போம். மக்களெப்பத்தி ஊரப்பத்தி எல்லாம் நாங்க சிந்திக்க மாட்டோம் எங்க அமைப்பின் மூக்கை உடைச்சு மண்ணு கவ்வ வச்ச அவங்களுக்கு எப்பவுமே நாங்க எதிர்ப்புதான். இப்ப புரிஞ்சுதா நாங்க யாருன்னு...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross