இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் . posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[24 January 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39039
மர்ஹூம் அரசர் அப்துல்லாஹ் (ரஹ்)அவர்களின் இறுதி பயண ஊர்வலம் சர்வ சாதாரணமாக,நான்கு ஐயிந்து பேர்கள் தூக்கிகொண்டு ஒரு சாதாரண துணியால் போர்த்தி வரப்பட்ட மையத்தை மையவாடிக்கு கொண்டு சென்றார்கள்!
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் ஒரு ஏற்றத்தாழ்வு என்பது இந்த தற்காலிக உலக வாழ்கையில்தான்.அந்த தற்கால உலக வாழ்கையிலும் தன்னால் இயன்ற எத்தனையோ நற் காரியங்களை செய்து மறைந்த புண்ணிய புருஷர் சௌதிஅரசர்..
எத்தனையோ ஏழை முஸ்லிம் நாட்டுமக்களுக்கு எல்லையற்ற உதவிகளை புரிந்தவர்.ஏன் நமது நாட்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு BJP அரசு வந்த உடனேயே,இந்த அரசால் இந்திய சிறுபான்மை மக்களாக்கிய முஸ்லிம்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமேயானால் அவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் உதவி போன்ற அடிப்படை உதவிகளை செய்ய சௌதி அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று தன் அமச்சரவையைக்கூட்டி பகிரங்கமாக பிரகடனப்படுத்திய புண்ணிய கோமான்.இன்று நம்மிடம் இல்லை!
தான் பட்டத்திற்கு வந்த உடனேயே முதலாவது விஜயம் செய்தது நம் இந்தியதேசத்திற்குதான். இங்கு வந்தது என் தாய்வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வை அடைகிறேன் என்று கூறிய அந்த அன்புக்குறியவர் இன்று நம்மிடம் இல்லை!.
இப்புண்ணியர் மறைந்த பின்னர் இவரின் பண்புகளையும், பேருதவி களையும் பல நாட்டவர்களும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிமிடம் வரை தொலைக்காட்சயில்!.
புனிதமிகு அல்லாஹ்வின் வீட்டையும், அவனின் அன்பு தூதரின்
வீட்டையும் பரிபாலனம் செய்து பாதுகாத்துவந்த காவலரை இழந்து நிற்கின்றோம்.அப்புண்ணியரைப்பற்றி தெரிந்தோ தெரியாமலோ விமர்சிதவர்களெல்லாம் வெட்கி தலைகுனியும் அளவிற்கு அவரின் புகழ் வையகத்தாரால் வானுயர புகழப்படுகிறது! அல்ஹம்திலில்லாஹ்!.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் எல்லா பிழைகளையும் மன்னித்து அவரது மண்ணறையை விசாலமாக்கி ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள் வானாக ஆமீன்! அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross