Re:...இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு posted bymackie noohuthambi (colombo)[28 January 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39107
சாரே ஜகான்ஸே அச்சா ஹிந்துஸ்தானி ஹமாரா ஹமாரா... அல்லாமா இக்பால் அவர்களின் அற்புதமான அர்த்தம் பொதிந்த கவிதை மழையில் மக்கள் நனைந்து கொண்டு இந்த நாளை இந்தியா ஹவுஸ் கொழும்பு நகரில் கொண்டாடியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்.
காயலர்கள் ஒன்று கூடி நிற்கும்போது அங்கே ஏற்பட்ட சந்தோசமும் தனிதான்.நிம்மதியும் சந்தோஷமும் கடையில் கிலோ என்ன விலை என்று கேட்டு வாங்க முடியாது . அது உணர்வுபூர்வமானது.
ரபீந்திர நாத் தாகூர் பாடினார் "WHERE THERE IS NO FEAR, INTO THAT HEAVEN OF FREEDOM, FATHER, LET MY COUNTRY AWAKE . அல்லாமா இக்பால் பாடியதும் கீதாஞ்சலியின் நாயகன் பாடியதும் உண்மையாக இருக்கக் கூடாதா...என் தாய் திருநாடு ஏன் வேறுபாதையில் பயணிக்கிறது....ஜீரணிக்க முடியவில்லையே...
இறைவா...சமய சார்பற்ற - எல்லா இனத்தவர்களும் எல்லா மொழியினரும் எல்லா நலமும் பெற்று இந்த நாட்டின் ஒரே குடி மக்களாக எல்லா உரிமைகளும் பெற்று வாழும் நாடாக எங்கள் தாய் திரு நாட்டை மாற்றி விடு. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள இந்தியர்கள் ஒன்றாகக் கண்டே...என்ற நிலை மீண்டும் ஏற்பட உன்னருள் வேண்டி நிற்கிறோம்.
இந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிழல் படங்கள் பிடித்து மகிழ்ந்திட உதவிய காவா லங்கா செயலாளர் ரபீக் அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன அவர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு சென்றவர் இன்று எங்கள் தோளிலும் கை போட்டு பேசிக் கொள்கிறார்.
HE CAN WALK WITH KINGS - TALK WITH POORS - HE HAS THE WINGS TO FLY TO ANY EXTENT .வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross