Re:...சதகதுல்லாஹ் அப்பாவை சதகாவாக ஞாலத்துக்கு ஈந்த ஞான பூமி posted bymackie noohuthambi (colombo)[30 January 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39127
கயல்பட்டினத்தை பற்றி கவிக்கோ அப்துர் ரஹ்மான் இப்படி சொல்வார். "சதகதுல்லாஹ் அப்பாவை சதகாவாக ஞாலத்துக்கு ஈந்த ஞானி பூமி காயல்பட்டினம்" என்பார்.
நாங்கள் தூய சவேரியார் கல்லூரியில் பயின்ற காலங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. தூய யோவான் கல்லூரி இன்னும் கிறிஸ்தவ கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள் நிறைந்து காணப்படும் தென்னகத்தின் oxford என்று அழைக்கப் படும் பாளையம்கோட்டையில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு கல்லூரி இல்லையே என்ற ஆதங்கம் என் போன்றவர்களுக்கு இருந்தது. ஐவேளை தொழுகை, நோன்பு காலங்களில் முறையாக நோன்பு நோற்பது இவை எல்லாம் இல்லாமல் அவற்றை நழுவ விட்ட காலங்கள் விழுப்புண்ணாக இன்னும் மனதில் இருக்கிறது.
சதக்கத்துல்லா அப்பா கல்லூரியை நிறுவுவதற்கு பகீரத பிரயத்தனம் எடுத்தவர்களை எல்லாம் இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
சில காலங்களுக்கு முன் இங்கே போராட்டங்கள் நடைபெற்றதையும் பார்த்து வேதனைப் பட்டேன். 2015இல் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நுழைபவர்களுக்கு அதன் அருமை தெரியாது. ஒரு இஸ்லாமிய கல்லூரி இங்கு இல்லையே என்று நாங்கள் வேதனைப் பட்ட 1962 போன்ற ஆண்டுகளில் நின்று பார்ப்பவர்களுக்கு அதன் அருமை புரியும்.
எனவே குறைகளை பெரிது படுத்தாதீர்கள். அன்பு தடிப்பாக இருந்தால் குறைகள் மெல்லிதாக தெரியும். குறைகள் தடிப்பாக தெரிந்தால் அன்பு மெல்லிதாக தெரியும். "அன்பால் குழைந்தை மிதிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது. தடவிப் பார்த்தல் இனிக்கிறது".
மாணவர்களை ஆசிரியர்கள் மன்னியுங்கள். மாணவர்கள் ஆசிரியர்களை மதியுங்கள் மன்னியுங்கள். தலை முறை இடை வெளி தவிர்க்க முடியாதது.
முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த நல்ல நிகழ்ச்சியில் எனது இந்த கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross