اللهم اغفر لها وارحمها posted byM.S.Kaja Mahlari (Singapore )[03 March 2015] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39426
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் முன்னாள் செயலர் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எல்.இத்ரீஸ் ஷாஃபிஈ அவர்களின் மனைவியும் , எனது வளர்ப்பு தாயுமாகிய பாசத்திற்குரிய சாச்சி ஹாஜ்ஜா சொளுக்கு மு.க.சுல்தான் பீவி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
எனது பாசத்திற்குரிய அருமை தாயாரின் ஒன்றர கலந்த
தோழியாவார்கள்.
எனது சிறிய வயதில் கடும் பெரளியின் காரணமாக யாருக்கும் அடங்காத என்னை எனது தாயாரின் சங்கேத பாசையால் அவர்களை அருகாமையில் இருக்கும் எங்களின் வீட்டுக்கு வரவைத்து, ஒரே தூக்காக என்னை தூக்கிச் சென்று அடக்கி ஆண்ட பெருமை அவர்களுக்கு உண்டு . அவர்களின் கணவர் மர்ஹூம் அல்ஹாஜ் இத்ரீஸ் சாட்சப்பா அவர்களிடம் என்னை ஒப்படைத்து விடுவார்கள் . அவர்களும் என்னை , மிரட்டி , உருட்டி , பயங்காட்டி எனது கடும்பெரளியை தற்காலிகமாக கட்டுக்குள் கொண்டுவருவார்கள் .எனது தாயாரின் வேண்டுகோளுக்கினங்க " பெயிலில் " மீண்டும் வீடு வந்து சேர்வேன் .
அத்தகைய அளவுக்கு எனது இளம்பிராயத்தில் கல்வி , ஒழுக்கம் போதித்த எனது வளர்ப்பு தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும் .
கடைசியாக ஊரில் எனது விடுமுறை காலம் முடிந்து மீண்டும் புறப்பட்டு வரும்போது பயணம் சொல்ல அவர்களை பார்க்க அவர்களின் இல்லம் சென்றேன் . இறுதிவரை தொழுகையும் , முசல்லாவுமாக இருந்த அவர்கள் என்னை கண்டதும் , அன்புடன் வரவேற்று , பழைய மலரும் நினைவுகளெல்லாம் பேசி , வாழ்த்தி , துஆ செய்து , பால் அருந்த தந்து பயணம் அனுப்பி வைத்தார்கள் .
1993 என நினைக்கிறேன் . கணவரோடு ஹஜ்ஜுக்கு வந்த அவர்கள் ஹஜ்ஜுக்கு போகிறேன் என அனைவரிடமும் பயணம் சொல்லும் போது , ஹஜ்ஜுக்கு போகிறேன் , கூட்டம் இல்லாமல் இருக்க துஆ செய் என சொன்னதும் ஆமா ! கூட்டம் இல்லாமல் இருக்க எல்லோரையும் வெளியில் அனுப்பி விட்டு நீ மட்டும் தான் தனியாக ஹஜ்ஜு செய்ய வேண்டும் என மற்றவர்கள் நகைச்சுவையாக அவர்களிடம் சொல்லுவார்கள் .
அந்நேரம் தாயிபில் பணியில் இருந்த நானும் ஹஜ்ஜுக்கு வந்திருந்தேன் . எனது தாயார் உட்பட எனது குடும்பத்தினர்களும் அவ்வருடம் ஹஜ்ஜுக்கு வந்திருந்தனர் . மினாவில் தங்கி இருக்கும் காலத்தில் " கல் எரியும் " சமயம் பார்த்து எனது தாயார் அடிக்கடி காணாமல் போகிவிடுவார்கள். எனது மூத்த சகோதரியின் கட்டளைக்கிணங்க மினா ஏரியாவில் சுற்றி, அலைந்து அவர்களை கண்டுபிடித்து, அவர்களை அழைத்து வருவேன். அப்படி ஒருமுறை தாயாரை அழைத்துக் கொண்டு மினாவில் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தபோது இத்ரீஸ் சாட்சப்பா அவ்விடத்தில் அழுதுகொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் என்னை அழைத்து அடே வாப்பா ! உனது சாச்சி காணாமல் போய்டாடா , நல்லாயிப்பா போய் தேடி கூட்டுட்டு வாம்மா என்றார்கள் .
மீண்டும் படை எடுத்து, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்களை கண்டுபிடித்து இருப்பிடம் அழைத்து வந்த நிகழ்வுகள் இன்னும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக “சப்ர்” எனும் பொறுமை கடைபிடிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் !
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல, குற்றங்கள் , குறைகளை மன்னித்து , அவர்களின் மண்ணறையை, விசாலமாக்கி, ஒளிமயமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் மாநபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் குடியமர்த்துவானாக ! ஆமீன் !!!!!!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross