ஆசிரியரின் ஆதங்கம் புரிகிறது. எல்லோருக்கும் சஹன் சாப்பாட்டில் ஒரு வித ஆசை இருந்தாலும் நடை முறையில் உள்ள குறைகளை களைய முடியவில்லை.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொன்ன பிறகுதான் சாப்பிடவே ஆரம்பிப்போம். அந்த ஒரு நடை முறை கூட நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்டது.
திருமண மேடைகளில் உலமாக்கள் சில சுலோகங்களை வழக்கமாக சொல்வார்கள். ஆனால் பந்தியில் சாப்பிடும் முறைகளை சொல்ல மாட்டார்கள். நபிகள் நாயகம் சாப்பிட ஆரம்பிப்பது - அதற்காக உட்காரும் முறை - சாப்பிடும்போது சக நண்பர்களுடன் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் விலாவாரியாக சொல்லி தந்து இருக்கிறார்கள். தப்லீக் ஜமாத்தில் மூன்று நாட்கள் போகிறவர்களுக்கு இந்த நபி வழியில் உணவு உண்ணும் முறை பற்றி போதிக்கப் படுகிறது. உணவு உண்பதற்கு பந்தலில் உட்காரும்போது இந்த ஹதீதுகளை சொல்ல முடியாது. ஒரு நோட்டிஸ் அடித்துக் கொடுத்தால் அதில் கை துடைத்து விட்டு கீழே போட்டு விடுவார்கள். இந்த முறையை மாற்றவும் முடியாது. ஏனெனில் சஹனில் உட்கார்ந்து கூட்டாக சாப்பிடுவதை நபிகள் நாயகம் அவர்கள் வற்புறுத்தி சொல்லி இருக்கிறார்கள்.
நமதூரில் நடக்கும் திருமணங்கள் மற்ற ஊர்களிலிருந்து வேறுபட்டது. ஒரு நாள் மாலை வரவேற்பு.
அடுத்த நாள் காலை கல்யாணம்.
கல்யாணத்துக்கு அழைக்கப் பட்டவர்களுக்கெல்லாம் சாப்பாடு இல்லை. கல்யாணத்துக்கு சொல்ல அடாப்பு போட்டால் 3000 பேர் வரும். ஆனால் கல்யாணத்துக்கு வருபவர்கள் 800 பேர்தான். அடாப்பு போட்டு சொல்லிவிடாமல் பள்ளிவாசலில் "அடாப்பு இல்லை இதுவே அடாப்பு" என்று எழுதி போட்டால் சம்பந்தப் பட்டவருக்கு கோபம் வருகிறது. நேரில் கண்டு சொன்னால் வரமாட்டார்கள். அடாப்பு சொல்லவில்லை என்று குறை சொல்வார்கள். அடாப்பு சொன்னால் நேரில் கண்டானே ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்பார்கள். சாப்பாட்டுக்கு சொல்லவில்லையே என்று கருவுவார்கள்.
இவ்வளவு பிரச்சினைகளையும் ஆசிரியர் தனது இரண்டாவது பாகத்தில் சொல்லுங்கள். ஆனால் பிரச்சினைகளை பேசினால் போதாது குறைகளை சுட்டிக் காட்டினால் போதாது. அதற்கான மாற்று வழியையும் சொல்ல வேண்டும்.குறைந்த பட்சம் நமது இல்ல திருமணங்களில் அதை அமுல் படுத்த முடிகிறதா..நமது மனைவி மக்களை திருப்தி படுத்த வேண்டி உள்ளது. மனைவி சொல் கேட்டால் வீடு மதுரை என்கிறார்கள். மனைவியை எதிர்த்து நின்றால் வீடு சிதம்பரம் என்கிறார்கள்.மவத்ததன் வரஹ்மா என்று மனைவியை பார்த்து அல்லாஹ் சொல்கிறான். அப்படிப் பட்டவளின் மனம் கோணும்படி நடக்க நமக்கு தைரியம் இல்லை.என்ன செய்வது,
இதை ஜீரணித்துக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான். சீர் திருத்தும் செய்ய முற்படும் ஒரு சிலரையும் ஏதாவது சொல்லி ஓரம் கட்டி விடுகிறோம். அவர் நொந்து நூலாகி எப்படியும் ஒழியுங்கள் என்று சொல்லி விட்டு போய் விடுகிறார்.
பழைய காகம் புதிய காகம் படம் போட்டிருக்கிறது. அந்தஐந்து அறிவுள்ள காக்கைகளுக்கு இப்போது தண்ணீர் குடிக்கும் முறை தெரிந்து விட்டது. புரிந்து விட்டது தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொண்டது...ஆனால் ஆறறிவு உள்ள மனிதன்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross