Re:... posted byVilack sma (jeddah)[19 March 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39690
ஆரோக்கியமான இரண்டு கருத்துக்கள் . நன்றி . மக்கீ காக்கா அவர்கள் குறிப்பிட்ட விசயங்களை கவனத்தில் கொண்டு அடுத்த கட்டுரை எழுத முயற்சிக்கிறேன் . இன்ஷா அல்லாஹ் ..
பாரம்பரியம் என்றால் என்றும் , எதிலும் மாற்றம் செய்யக்கூடாதது . ஆனால் தற்போது அப்படி இல்லை .
நடைமுறையில் உள்ள குறைகளை களைய முடியவில்லை என்று மக்கீ காக்கா குறிப்பிட்டது , அதை குறை என்று சொல்லாமல் காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்று எண்ணுங்கள் . ( நீங்கள் குறிப்பிட்ட பிஸ்மில்லாஹ் கருத்தை தவிர்த்து ) சமத்துவம் , சகோதரத்துவம் இவை தவிர்த்து மற்ற விசயங்களை ஆராய்ந்தால் சஹன் விருந்தில் மாற்றமே காணாதது கலரி சாப்பாட்டின் சுவை ஒன்றுதான் . மற்றபடி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .
மண் சிட்டி சில்வர் கிண்ணமாகவும் , களைய தண்ணீர் பாக்கெட் தண்ணீராகவும் மாறியது . மண் பாண்டங்கள் செய்யும் தொழிலார்கள் குறைந்து வருவதே காரணம் . களைய தண்ணீரில் சுத்தம் பேனப்படாததும் காரணம் . முன்பு பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க மண்சிட்டியில் கஞ்சி. தற்போது அதுவும் மெலமின் கோப்பையாக மாறி இருக்கிறது .
கறி கத்திரிக்காய் புளியாணம் என்று ஒவ்வொன்றாய் வைத்து பரிமாறுவதில் ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்து ஒரே வேலையாக இருக்கட்டுமே என்று கருதி கலரி சோறு பிரியாணியாக மாறியது .
பனை ஓலை தட்டுப்பாட்டினால் பாய் , டேபிள் சேறாக மாறியது.
தனி பிளேட்டில் சாப்பிட எண்ணுவது பாடாய்ப்படுத்தும் அந்தஸ்து.
ஆக , பாரம்பரியமே சிறந்தது என்று எண்ணுபவர்கள் , மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் எதனால் வந்தது என்று எண்ணினால் ஒருவேளை அதை ஆமோதிக்கலாம் .
தரையில் அமர்ந்து பாரம்பரியமாக சாப்பிட்டாலும் , டேபிள் சேரில் அமர்ந்து தனி ஆளாக சாப்பிட்டாலும் கூட்டாக பிஸ்மில்லாஹ் சொன்னபிறகு உண்ண ஆரம்பிப்பது ஒன்றுதானே. மக்கீ காக்கா சொன்னது போல் இந்த பாரம்பரியத்தை மறந்தது வருத்தமான விசயம்.
சஹன் சாப்பாட்டு முறைகள் நிச்சயமாக மாறும் . காரணம் , அது காலத்திற்கு தகுந்தாற்போல் உள்ள மாற்றமே .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross