Re:... posted byUMMUHANI KAREEM (kayalpatnam)[19 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39708
நீங்கள் சஹன் சாப்பாட்டை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆண்கள் வேண்டுமானால் கடைசி நேரத்தில் போகும் போது யார் இருக்கிறார்களோ அவர்களுடன் இருந்து கொள்வீர்கள். ஆனால் பெண்களின் நிலைமை கண்டிப்பாக யாரையாவது துணைக்கு கூட்டிக்கொண்டே போக வேண்டும் துணை இல்லாவிட்டால் போக முடியாது.
அடுத்து சீர் கொடுப்பது மாறி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் கட்டுரையாளர் அவர்கள். இப்போது தான் மோசமான நிலைமையில் இருக்கிறது பெண் பேசி சீர் கொடுப்பதற்காக 50 தட்டு 41 தட்டு என்ற நிலைமையில் போய்கொண்டிருக்கிறது நடுத்தர வாதிகள் என்ன செய்வார்கள்? நிக்காஹ் நடந்தால் தானே அது திருமணம் ஆகும் இடையில் ஏதாவது ஒரு காரணத்தால் தடங்கலாகி விட்டால் என்ன செய்ய முடியும்?
அடுத்து முக்கியமான ஒரு விஷயம் எப்படியம் திருமணம் என்றாலே அந்த குடும்பத்துக்குள்ளே கண்டிப்பாக 3 அல்லது 4 விருந்தாவது நடக்கும் அதில் வெளியில் எல்லோரையும் கூப்பிடுவார்களே அந்த விருந்தை தவிர மற்ற அந்த குடும்பத்துக்குள் நடக்கும் விருந்துகளில் சைவ சாப்பாடு . காய்கறி பிரியாணி இரவு நேரமாக இருந்தால் கறி அல்லாத முறையில் நாஷ்டா என்று இந்த மாற்றத்தை கண்டிப்பாக நமதூர்களில் யாராவது ஒருவர் துணிந்து முதன்முறையாக அமல்படுத்த வேண்டும் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது சலிப்படையாமல் சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்கும்
நமதூரில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் தான் இந்த மாற்றம் தான் கண்டிப்பாக தேவை
மே டிசம்பர் மாதங்களில் 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கல்யாண சாப்பாடு என்றால் என்ன நிலைமை?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross