நல்ல மனிதர்... posted byS,K.Salih (Kayalpatnam)[31 March 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39912
காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், பிற சமயத்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகின்றனர்.
நம் யாவருக்கிடையிலும் எங்கும் காணக்கிடைக்காத இணக்கமும், உறவும், பிணைப்பும் வலுவுடன் இருந்து வருகிறதெனில், ஐயா இசக்கி ஆசாரி அவர்களைப் போன்ற மூத்தோரின் நல்ல எண்ணங்களே அவற்றுக்கு அடித்தளம்.
நான்கு தலைமுறைகளைக் கண்டு மகிழ்ந்த இப்பெரியவருக்கு, செஞ்சுரி அடிக்க வாய்ப்பின்றிப் போய்விட்டது.
நமதூரின் நலன் காத்த நன்மக்களெல்லாம் ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் காட்டித் தந்த பாதையில் அணிவகுத்துச் செல்வதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
பெரியவரின் மறைவால் துயரிலிருக்கும் என் மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய கவுன்சிலர் சாமி அண்ணன், பெருமாள் அண்ணன், மாரியப்பன் அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் இறைவன் நல்ல பொறுமையை வழங்கியருள்வானாக...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross