குழந்தைகளின் விடுமுறைக்காலங்களில் நமக்கும் விடுமுறைக்காலமாகவும்,மற்றஒய்வுப்பொழுதுகளுமாக இருந்தால் நிச்சயமாக அந்தநாட்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதே சாலச்சிறந்தது அதோடு நாமும் நமதுமனோநிலையை நமதுகுழந்தைப்பருவத்திற்கு அழைத்துச்செல்லவேண்டும்.
கல்வியென்றபெயரில் நமதுகுழந்தைகள் சுமைதூக்கிகளாக மாறிவிட்டார்கள் நாம்படித்த காலங்களில் எத்தனைமணிக்கு இருவுபடுக்கைக்குச்செல்வோம்,காலை படுக்கையைவிட்டு எப்பொழுதுஎழுவோம்? ஒருசிலேட்,ஒருகல்குச்சி,2அல்லது3 புத்தகங்கள் இதை ஒருகணம் நாம்திரும்பிப்பார்த்தாலேபோதும் நம்மைக்காட்டிலும் நமதுகுழந்தைகள் சுறுசுறுப்பிலும்,முயற்சிகளிலும் வெற்றிகலிலு பலபடிகள்மேலயே இருக்கின்றனர் ஆனால்சீரான மனோ நிலையில்மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
இன்றையகால நடைமுறைக்கல்வி கல்வியென்றபெயரில் குழந்தைகளுக்கு மனஅழுத்தங்களே தரப்படுகின்றன,இயற்கையையும்,இயல்பைபையும் அவர்கள் கண்டுகலந்துகொள்ள நாம் அவர்களுக்கு அவகாசமோ ஒத்துழைப்போ கொடுப்பதில்லை இதுதான் இன்றைய நிதர்சனஉண்மை.
1970,80களில் 10ம்,12ம் வகுப்புத்தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பெயர்பட்டியல்கள் நாலிதழ்களில்வரும் 500மதிப்பெண்களுக்கு 460,470 எடுத்திருப்பவர்களே முதலாவதாக வந்த சாதனையாளகளாககாணப்பட்டனர் ஆனால் இன்று நமது குழந்தைகள் 500க்கு 480 மதிப்பெண்களைத்தாண்டினாலும் நாக்குத்திருப்தியில்லை இந்தஎண்ணம் ஏனென்றுபுரியவில்லை,
பேராசையும்,பொறாமையுமா? அல்லது தாழ்வுமனப்பான்மையா?
இன்னும் எந்தக்குழந்தைகளுடனும் எந்தக்குழந்தைகளையும் ஒப்பிட்டுப்பேசும்போதும்,இந்தப்பாடத்தைத்தான் நீ எடுத்துப்படிக்கவேண்டுமென்று திணிக்கும்போதும் நிச்சயாமாக மனோரீதியாக நாமே அவர்களைப்பின்னுக்குத்தள்ளிவிடுகிறோம்.
ஆசிரியர் சாளை பஷீர் ஆரிஃப் அவர்கள் வரிகளில் மென்மையாக வருடியிருக்கிறார்கள் தம்குழந்தைச்செல்வங்களின் உணர்வுகளையும்,ஆவல்ஆதங்கங்களையும் புரிந்துகொள்ள அதைப்பற்றி எடுத்துச்சொல்ல நேரம்ஒதுக்கி சந்தர்ப்பத்தை உருவாக்கி
இந்தக்கட்டுரையை நமக்குத்தந்திருகிறீர்கள் மிக்கநன்றி ஜஜாக்கல்லாஹ் க்ஹைர் இன்ஷா அல்லாஹ்
இன்னும் நல்ல விஷயங்கள் நிறைந்த கதை,கட்டுரைகளைத்தாருங்கள் அந்த வல்லமையையும்,வசந்தத்தையும் உங்கள் வாழ்நாளில் வல்லஇறைவன் தந்தருள்வானாக ஆமீன்.
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross