Re:...படங்கள் அல்ல பாடங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[12 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40521
சாளை பஷீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு இப்படி ஒரு படைப்பாற்றல் இருப்பது மனதை கொள்ளை கொள்கிறது.
சேர்ந்து வாழ்வது LIVING TOGETHER ..ஓகே கண்மணி ...அதுதான்
''ஓ காதல் கண்மணி...'' இப்போது திரைப்பட உலகில் வசூலை அள்ளிக் கொண்டு இளைஞர்களின் உள்ளங்களை கிள்ளி பார்க்கும் சுகாசினி மணாளன் மணி ரத்தினத்தின் படைப்புக்கும் உங்கள் படைப்புக்கும் பாரிய வித்தியாசம் இருப்பதை இந்த கட்டுரையை படிப்பவர்கள் உணர்வார்கள்.
ஒரு தந்தை அவர் எப்போதும் கணினி மயமானவர். குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் இல்லை, மனைவியுடன் அன்பாக பேச ஒரு நாள் ஒதுக்க அவருக்கு நேரம் இல்லை. குழந்தை வளர்ந்து பெரியவனாகினான் ஒரு நாள் கேட்டான் அப்பா நீங்கள் அலுவகத்தில் ஒரு நாள் வேலை செய்தால் எவ்வளவு ரூபாய் கிடைக்கும். அவர் ஒரு தொகையை சொன்னார். நீங்கள் என்னுடன் ஒரு நாள் இருங்கள் பேசுங்கள் என் மனக்குறைகளை கேளுங்கள் அம்மாவுடன் இருங்கள் அவள் மனக்குமுறல்களை கேளுங்கள் நீங்கள் அலுவலகத்தில் பெறும் ஒரு நாள் சம்பள பணத்தை நான் என் சேமிப்பு பணத்திலிருந்து தருகிறேன்.
தந்தை திடுக்கிட்டார். என்ன பேச்சு பேசிவிட்டான்....அவன் பேசியது தவறென்று அவர் சொல்லவில்லை. தான் செய்த தவறை எவ்வளவு கச்சிதமாக தன் மகன் தனக்கு புரியவைத்து விட்டான் என்று உணர்ந்து அவனை உச்சி முகர்ந்து தன் அன்பை பாசத்தை வெளிப் படுத்தினான். உங்கள் கட்டுரையை படிப்பவர்கள் இந்த உண்மையை உணர்வார்கள்.
விடுமுறை கால கடிதம்...நீங்கள் இங்கே வரைந்துள்ள படங்கள் - அது வெறும் படங்கள் அல்ல பாடங்கள். .வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross