Re:...வைகறையில் ஒரு உருவம் posted bymackie noohuthambi (kayalpatnam)[05 June 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40861
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வைகறை தொழுகை முடித்துக் கொண்டு ஆராம்பள்ளி தெரு வழியே வருபவர்களுக்கு அது தெரியும். அங்கே ஒரு உருவம் தன வீட்டுமுன்னால் உள்ள குப்பை கூளங்களை அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டு அவர் வீட்டு முன்னாள் உள்ள தெருவையும் ஒரு நீண்ட உயர்ந்த விளக்குமாறால் பெருக்கிக் கொண்டிருக்கும். இவர் யார் இந்த வார்டு உறுப்பினரா அல்லது துப்புரவு தொழிலாளியா..இல்லை, அவர் ஒரு மாணிக்க வியாபாரி அவர்தான் மர்ஹூம் அன்வர் ஹாஜி.
இறை இல்லத்தில் அரபகத்து வாங்கின் அழைப்பொலி எல்லா மனிதர்களும் தொழ வாருங்கள் என்று அழைக்கும் கணீரென்ற குரல் ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக் காரர் மர்ஹூம் அன்வர் ஹாஜி அவர்கள்.
பேச்சிலே மென்மை ஒரு புன்சிரிப்பு சந்திப்பவர்களை மகிழ்விக்கும் உபசரிப்பு . தொழிலிலே நேர்மை அணியும் உடையிலும் மென்மை. பொது வாழ்விலும் தூய்மை. வயது முதிர்ந்தாலும் இளைஞன் போல் காலம் தவறாது சுழலும் ஒரு காலக் கடிகாரம். இவற்றின் மறுபெயர் மர்ஹூம் அன்வர் ஹாஜி.
தனக்கு அளிக்கப்படும் பொறுப்பு சிறியதோ பெரியதோ அதை கன கச்சிதமாக செய்து முடிக்கும் ஆற்றல் அவர் ஜாவியாவில் நிற்கும்போது அவரை சந்தித்தவர்களுக்கு அது தெரியும். இத்தகைய சீரிய குணங்களுக்கு சொந்தக் காரர் தன் மக்களையும் அந்த வழியில் வார்த்து எடுத்தவர்கள்.
இந்த நல்ல நாளிலே அவர்கள் மரணித்த செய்தி வந்தபோது மனம் கனத்தது. அல்லாஹ் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக அவர்கள் குற்றம் குறைகளை மன்னித்தருள்வானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்குவானாக. எனதருமை இல்யாஸ் பஷீர் மக்கி சகோதர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross