Re:...நமதூர் தொலைக் காட்சிகளில் விளக்குங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[05 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41223
கட்டுரை போட்டி நடத்துவதின் நோக்கம் இந்த ஜன்செவாவின் வட்டி இல்லா கடன் என்ற இலக்கை பற்றி சொல்வதுதான்.
நமதூரில் செயல்படும் தொலைக் காட்சிகளில் ஜனசேவா பற்றி சொல்லுங்கள். ஊரில் இதைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை. நமக்கு நாமே இதை தெரிந்து வைத்திருக்கிறோம். ஊரில் பெண்கள் மத்தியில் ஒரு கருத்து கணிப்பு எடுத்து பாருங்கள். அல்லது பொது மக்களை கிழக்குப் பகுதி, வடக்கு பகுதி மத்திய காயல் இங்கெல்லாம் கேட்டுப் பாருங்கள் பேட்டி காணுங்கள் அவர்கள் சொல்வார்கள் ஓஹோ.... அப்படியா...தெரியாதே என்றுதான் சொல்கிறார்கள். வெறும் நோட்டிஸ் படிப்பதனால் விழிப்புணர்வு வந்து விடாது.பெண்களிடம் இந்த செய்தி சென்றடைவேண்டும் அவர்கள்தான் அதிகமாக வட்டிக்கு நகைகளை அடகு வைத்து அலைக்கழிக்கப் படுகிறார்கள்.
எத்தனையோ விஷயங்களுக்கு ஹராம் ஹலால் என்று பத்வாகளை கொடுக்கும் நமதூர் உலமாக்கள் மதரசாக்கள் இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறார்கள். இதுதான் மக்களுக்கு இந்த ஜன்செவாவின் திட்டத்தில் இணைவதற்கு தடையாக இருக்கிறது. நோக்கம் நல்லது என்பதை புரிந்து கொண்டால் இதற்கு ஆதரவு பெருகும். செல்வந்தர்கள் இதில் உறுப்பினர்களாக வேண்டும் அவர்கள் அள்ளிக் கொடுக்கும் நிதியிலிருந்து ஏழைகளுக்கு உதவ முடியும்.என்பது என் தாழ்மையான கருத்து. ஜன்செவாவின் நோக்கம் பற்றி கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கருத்தரங்கங்கள் போல் தொடர்ந்து நடத்தப் பட வேண்டும். ஊரின் மூலை முடுக்குகளில் தெரு வழி பிரச்சாரம் நடத்த படவேண்டும் அதற்கு இதன் நிர்வாகிகள் குறிப்பாக தம்பி முஜாஹித், இபுனு சவூத், லெப்பை தம்பி வாவு காதர் ஹாஜி இவர்கள் களம் அமைக்க வேண்டும்.
எனக்கு ஒரு சிறிய அனுபவம். நாங்கள் மாணிக்க வியாபாரம் செய்பவர்கள் . ஆனால் ஆளை வைத்துதான் அந்த மாணிக்கத்தின் பெறுமதி விளங்கும். நான் கொண்டுபோய் காட்டும் மாணிக்கத்துக்கு குறைத்து விலை போடுவார்கள். ஆனால் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் அதே மாணிக்கத்தை கொண்டுபோனால் அவர்களிடம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவார்கள். அதே போல்தான் எல்லா விஷயமும். செல்வந்தர்கள் கல்வியாளர்கள் இந்த செய்தியை சொல்லும்போது அதை காது கொடுத்து கேட்பார்கள். . யாரோ சிலர் செய்கிறார்கள். நமக்கென்ன வந்தது என்று இருக்கிறார்கள். இந்த குறைகள் எனது மனதில் பட்டது அதை இங்கு பதிவு செய்கிறேன்.
மற்றபடி இந்த ஜன்செவாவை குறை சொல்பவர்கள் அதன் நடவடிக்கைள்பற்றி தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பவர்கள் இங்குள்ள அலுவலகத்துக்கு சென்றால் அது பற்றி தெளிவான விரிவான விளக்கம் தருவதற்கு காத்திருக்கிறார்கள். நோன்பு காலங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அலுவலகம் உங்களுக்காக திறந்தே இருக்கும். கட்டுரை எழுத நினைப்பவர்கள் ஒரு முறை இந்த அலுவலகத்துக்கு சென்று அவர்கள் சொல்லும் கருத்துக்களை உள்வாங்கி கொள்ளுங்கள்.
பரிசுகளை தட்டி செல்ல ஒரு டிப்ஸ் தந்து விட்டேன்.
இந்த கட்டுரை போட்டி மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். அல்லாஹ் நம் நல்ல எண்ணங்களை கபூல் செய்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross