இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[07 July 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41248
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
ரமழான் முபாரக்.
உளஅளவிலான கலிமாவுடனான தொடர்பிலே உண்மைகள்விளங்கி துயரங்கள் அறுபடுகின்றன, எப்படி ஒருசிசுவானது பிரசவிக்கும்போதுதனது தொப்பூழ்கொடியின் தொடர்பை இழந்து கதறுகிறதோ அதுபோலவே கலிமாவும் மனிதனின் வாழ்வில் உளஅளவில் தொடர்புள்ளாதாக இருக்கவேண்டும், ஆனால் மனிதனோ எப்படி அந்த சிசு சிறுகச்சிறுகஅந்தத்தொப்பூழ்கொடியின் உறவைமறந்துவிடுகிறதோ அதுபோலவே மனிதன் கல்பளவில்கலிமாவைவிட்டுவிலகி,உதட்டளவிலேயே உறவாடுகிறான், அந்த உள்ளச்சத்தை மீண்டும் மீட்டெடுக்க வாய்ப்பாகவந்த வாஞ்சையே ரமழான்
ரசம் தூர்ந்துபோன நிலைக்கண்ணாடியான ஆன்மாவிற்கு மீண்டும் ஆண்டிற்கொருமுறை ரசம்பூச அருளப்பட்ட அருட்கொடை ரமழான் மனிதன் தன்னைப்புதுப்பித்துகொள்ள அரியதோர்வாய்ப்பு அல்ஹம்துலில்லாஹ்.
சூஃபியிச வழியில் ஆசிரியர் அவர்களின் எழுதுகோல் தவழ்ந்திருக்கிறது மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்.
"அச்சில்லாமல் உள்ளச்சத்தோடு சுற்றும் உலகின் ஹக்கன் அல்லாஹ், தூய கலிமா அச்சாகிவிளங்கி அவணி சுழல்கிறது ஹக்கன் உன் அருளால்."
"இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்"
உன்னையே நாங்கள் வணங்குகிறோம் இன்னும் உன்னிடமே நாங்கள் உதவிதேடுகிறோம்.
அனைத்தையும் தூய்மையாக்க நீயே போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ்.
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கேற்ற அருமையான படைப்பு ஆசிரியர் அவர்களின் படைப்புகள் தொடர படைப்புகள் அனைத்திற்கும் காரணமானவனிடம் பிரார்த்திக்கிறேன் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross