Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[22 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41385
மனம் போன போக்கில் கண்ட கண்ட இடங்களில் நகரில் சேரும் குப்பைகளை நகராட்சி (குடியிருப்பு பகுதியில்) கொட்டுவதை தவிர்த்து விட்டு முறையாக நகர்மன்றத்தில் BUFFER ZONE தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி கொடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படலாம் - 90 லட்ச ரூபாய் மதிப்பிலான பயோ கேஸ் திட்டத்தினால் நகர்மக்களுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை இத்திட்டத்தின் மூலம் பயன் பெற போவது நகராட்சி அதிகாரிகளும், தனி நபர்கள் சிலருமே..! மக்கள் வரி பணம் மக்களுக்காக செலவிட படவேண்டும்.
ஒரு சிலர் மட்டுமே பயன் பெறும் வகையில் இத்திட்டம் நிறைவேற நகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பது கண்டிக்கத்தக்கது..!
நகர்மக்களுக்கு மிக மிக அவசியமான நகர்மக்களின் எதிர்ப்பார்ப்பு என்னவனில் அந்த நிலத்தில் நகராட்சிக்கான குப்பை கிடங்கு அமைவது மட்டுமே..! அது அமைவதற்கு அதற்க்கான BUFFER ZONE தீர்மானத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி கொடுக்க முன் வர வேண்டும்..! ஏன் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்..? அந்நிலத்தில் குப்பை கிடங்கு அமைய இவர்களுக்கு விருப்பமில்லையா..?
சர்வே எண் 278 நிலத்தில் இத்திட்டம் இவ்வழக்கின் மூலம் தோல்வியடையுமானால் நகரின் சில சுய நலமுள்ள தனிநபர்களுக்கு மட்டுமே இழப்பாகும் - இதனால் நகரிலுள்ள பொது மக்களுக்கு நட்டமில்லை என்பதோடு நகர் மக்களின் வரி பணம் பல லட்ச ரூபாய் வீண் விரைய செலவுகளிலிருந்து மீளபடுவது மட்டுமல்லாமல், இவ்வூருக்கு எதிரான சிலரின் மிகப்பெரிய சதியும், சுயநலமும், எதிர்ப்பார்ப்பும், முறியடிக்கப்பட்டதாக அமையும் - இதை தான் நகரின் சமூக ஆர்வலர்கள் பலரும் விரும்புகிறார்கள் - சமூக ஆர்வலர்களின் இவ்விருப்பம் நிறைவேறாமல் பொய்க்குமானால் மொகுதூம் ஜும்மா பள்ளியின் மையவாடி நிலத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியின் கேவலமான (அவமான சின்னம்) நிலைதான் இந்த பயோ கேஸ் திட்டம் அமையும் இடத்திலும் ஏற்பட போகிறது.
சர்வே எண் 278 வழக்கு விசியத்தில் நகரின் சமூக ஆர்வலர்கள் பலரும் மிக தெளிவாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை நகராட்சி ஆணையரும், நகர்மன்ற உறுப்பினர்களும் நினைவில் கொள்ளவேண்டும்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross