13 வது வார்டு பொது மக்களே...! ரெம்ப ஜாக்கிரதை..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[29 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41773
குறுகிய நேரம் நடந்த இன்றைய வாதங்களின் போது, நகராட்சி மற்றும் அரசு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் அப்துல் சலீம், தற்போது காயல்பட்டினத்தில் குப்பைகள் கொட்டப்படும் இடம் குறித்து நகரில் பதட்டம் நிலவுவதாகவும், இதனால் சட்ட - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறினார். அதற்கு பதில் வழங்கிய நீதிபதி ஜோதிமணி, சட்ட ஒழுங்கு குறித்து தீர்ப்பாயம் ஏதும் கூற இயலாது என தெரிவித்தார். CP
13 வது வார்டு பொது மக்களே...! சமீபத்தில் நகராட்சியில் நாம் அளித்த மனுவை சிலர் எப்படியல்லாம் பயன் படுத்துகிறார்கள் பாருங்கள் - உஷார் உஷார்... இனி வேறுமாதிரி நம்மை தூண்டி விட்டு இவர்கள் ஆதாயமடைய முற்படுவார்கள்..!
13 வது வார்டு பொது மக்களே...! ரெம்ப ஜாக்கிரதை..!
---------------------
நான் அப்பவே நினைத்தேன்.. நகராட்சியில் 13 வது வார்டு பொது மக்கள் ஆணையரிடம் மனு அளிக்கும் போது நமது 13 வார்டுக்கு சம்பந்தமே இல்லாத புதிய புதிய முகங்கள் ரெம்ப மும்மரமாக செயல்பட்டது அதில் நமது வார்டுக்கே சம்பந்தமில்லாத ஒருவர் என்னிடம் வம்பு காத்து கடைசியில் தூர விலகி சென்றது நாம் அறிவோம்..
காயல்பட்டினம் தென் பாக கிராமத்தில் சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் அவசர அவசரமாக பயோ காஸ் திட்டப்பணிகள் துவங்கப்பட்ட நிலமான சர்வே எண் 278 க்குரிய வழக்கை திசை திருப்ப செய்யும் முகமாக ஒரு சில விஷமிகளால் 13 வது வார்டு பப்பரப்பள்ளி பகுதி குப்பையில் திட்டமிட்டு தீ வைக்கபடுவதாக நகரின் சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவிக்கின்றனர் - மேலும் நகரில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி அப்பாவி மக்களை (நம்மை) அச்சமடைய செய்து அதனால் ஏற்படும் அனுதாபத்தை தனக்கு சாதகமாகவும், மீடியாக்களுக்கு பொய்யான தகவலை அளித்து சர்வே எண் 278 க்குரிய வழக்கை திசை திருப்ப செய்யும் முயற்சியாகவும், தனக்கு ஒரு விளம்பரம் தேடிக்கொள்ளும் முகமாகவும் பப்பரப்பள்ளி குப்பை விசியத்தில் ஒரு சில விஷமிகள் (குப்பை மேட்டரை) கையில் எடுத்து களம் இறங்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்...
பப்பரப்பள்ளி / L. F. ரோடு வாழ் பகுதி மக்களுக்கு ஒரு வேண்டுகோள்..! விளம்பரம் தேடி ஆதாயம் அடைய முற்படும் இந்த விஷமிகளை அடையாளம் கண்டு புறம் தள்ளி வைத்து விட்டு இந்த (பப்பரப்பள்ளி) குப்பை விசியத்தில் பிரதிபலன் எதிர்பார்க்காத நல்லவர்களுடன் கை கோர்த்து நல்ல தீர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும் - மன தூய்மையாக செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ்.. கண்டிப்பாக பப்பரப்பள்ளி / L. F. ரோடு வாழ் பகுதி மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பு:- இந்த பப்பரப்பள்ளி / L. F. ரோடு வாழ் பகுதி மக்களின் துயரத்தில் பங்கு கொள்கிறேன் / அனுதாப படுகிறேன் என்ற போர்வையில் எங்களிடம் சுய ஆதாயத்தை சாதிக்கலாம் என மனதில் ஆசை வைக்காதீர்கள்..! அது ஒரு போதும் நிறைவேற போவதில்லை..! சட்டம் தன் கடமையை செய்யட்டும்..! இங்குள்ள எங்களது பிரச்சனையையில் நீங்கள் ஆதாயம் அடைய வேண்டாம்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross