Re:...அம்மாவின் 110ம் வள்ளுவரின் 110ம் posted bymackie noohuthambi (colombo)[30 September 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41919
அம்மா அவர்கள் எல்லா திட்டங்களையும் விதி என் 110 இல் அறிவிக்கிறார்கள்.
முன்பெல்லாம் சட்டமன்றத்தில் விவாதங்கள் நடந்து கருத்துக்கள் பரிமாறப் பட்டு திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டு அல்லது நிராகரிக்கப் பட்டு ஒரு ஜனநாயக அணுகு முறை இருந்தது. ஒரு வகையில் இதுவும் சரியாகத்தான் தெரிகிறது வீணான விவாதங்கள் நடப்பதை தவிர்த்து ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடலாம் ஆனால் அந்த 110 விதியின் கீழ் வெளியிடப் படும் திட்டங்கள் எதுவுமே நடைமுறைப் படுத்தப் படுவதில்லை என்ற குறையும் இருக்கிறது.
பேராசிரியர் அவர்கள் DCW விவகாரத்தையும் இந்த விதி 110 இன் கீழ் முடிவு செய்ய அம்மா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். என்றாலும் பேராசிரியர் அவர்கள் கடந்த 5 ஆண்டு காலங்களில் சமுதாயத்துக்காக குரல் கொடுத்த செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்ததில்லை. சட்டமன்றம் இப்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் நமதூருக்காக குரல் கொடுத்திருப்பதை மனமார வரவேற்கிறோம். வள்ளுவர் குறள் என் 110 இல் ஒரு செய்தியை சொல்கிறார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross