செய்தி: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்ட ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: வட்டாச்சியர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் நகராட்சி ஆணையர் வாக்குறுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[01 October 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41938
நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 43/1 இடத்தில், பல ஆண்டுகளாக நகராட்சி திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. CP
அட.. அட..! அப்போ...! நாம் தாம் அதன் உண்மை நிலைமை / நிலவரம் தெரியாமல் அங்குள்ள அக்குப்பை பகுதி நிலத்தில் நிலம் வாங்கி குடியேறி இருக்கிறோம் என்று இப்பதான் சில பேருக்கு தெரிய வருகிறது என கருதுகிறேன் - மேலும் அப்பகுதியில் நமது மாற்று சமுதாய சகோதரர்களின் தகன மேடை (இறந்தவர்களை எரியூட்டும் மேடை) யும் உள்ளதே அதுவும் கூட குடியிருப்பு வரும் முன்பே இருந்திருக்கும் தானே..!
சரி சரி எது எப்படியோ.. அது அப்படி இருந்துட்டு போகட்டும்..
இப்போது மக்கள் வீடு கட்டி குடியேறி விட்டார்கள் இனி இப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 43/1 இடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்பது எல்லோரின் கருத்தாக உள்ளது.
ஆகவே நகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்காகவே தொலைநோக்கு பார்வையில் பரந்த நற்சிந்தனையுடன் மரியாதைக்குரிய மர்ஹூம் M K T அப்பா அவர்கள் நகர்மன்ற தலைவராக இருக்கும் காலத்தில் நகர் நலன் கருதி 1954 ஆம் ஆண்டில் ஒதுக்கிய சர்வே எண் 392 / 5 ல் 7 ஏக்கர் 5 செண்டு நிலத்தில் 5 ஏக்கர் நிலம் என்னானது...? அதை பற்றி நகரில் யாரும் கேள்விகள் எழுப்புவதில்லையே ஏன்..? எதற்கு மவுனம்..? அதற்க்கான காரணங்கள் தான் என்ன..?
மேலும் குப்பை கிடங்கு அமைக்க நகரின் தனவந்தர் ஒருவர் அளித்த சர்வே எண் 278 /1B நிலம் 4 ஏக்கர் நிலத்தில் (சில லட்சமே மதிப்புள்ள சுவர் கட்டுதல்) குப்பை கிடங்கு அமைக்காமல் 90 லட்ச ரூபாய் மதிப்பிலான பயோ கேஸ் பிளான்ட் அமைப்பதின் அவசர நோக்கமென்ன...? ஏன்... எதற்கு மவுனம்..? அதற்க்கான காரணங்கள் தான் என்ன..? யாரவது ஆணையரிடம் / தலைவரிடம் / உறுப்பினர்களிடம் கேள்விகள் எழுப்பியதுண்டா...?
என்றைக்கு இது சம்பந்தமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகிறதோ..! அன்றைக்கு குப்பைக்கான தீர்வு கிடைக்கும்.. அது வரை பப்பரப்புளி பகுதி குப்பை கொட்டுதல் நாவல் தொடரும்...
இது சம்பந்தமாக நகராட்சி மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களிடம் ஆலோசனை பெறுவது கூட பாதிக்கபடுவோருக்கு நல்ல பயனை தரலாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross