Re:...எப்படிக் கட்டி முடிக்கப் போகிறோம்....இப்படிதான் நாம் கட்டி முடிக்க செய்வோம்.. posted bymackie noohuthambi (colombo)[03 October 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41944
எப்படிக் கட்டி முடிக்கப் போகிறோம் இந்த பள்ளியை என்று கை பிசைந்து கவலையுடன் நின்றவர்களுக்கு அல்லாஹ் சொன்ன செய்தி நாம் ஒன்றை செய்ய நினைத்தால் நாம் சொல்வதெல்லாம் ''ஆகி விடு'' என்ற ஒரு சொல்தான் அது ஆகி விடும். அப்படித்தான் இந்த பள்ளிவாசல் கட்டி முடிக்கப் பட்ட அதிசயம் நடந்தது.
இயற்கையான தடைகளை கூட அது இறைவனால் ஆனது என்று சாமாதானப் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் செயற்கையான தடைகள் சொல்லி மாளாது. அப்படி கைபிசைந்து கவலைப் பட்டு கண்ணீர் வடித்தவர்கள் கூட இன்று கைலாகு செய்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி இது.
இந்த குதூகலமும் மகிழ்ச்சியும் நிலைத்து நிற்க கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழிமுறை.
விட்டுக் கொடுப்பது , மன்னிப்பது , மன்னிப்பு கேட்பது அடுத்தவர் குறைகளை துருவி துருவி ஆராயாமல் இருப்பது தன் குறையையே நினைத்து வருந்தி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுவது குடும்பங்களை சொந்தங்களை அரவணைத்து செல்வது
இவைகளை நாம் நமது அன்றாட வாழ்வியலாக அனுசரித்து வந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த பள்ளி வாசல் நமக்கு என்றும் நிம்மதி தரும் இடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross