Re:...innaalillaahi posted byNIZAR (kayalpatnam)[20 October 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 42054
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
பள்ளி பருவ இனிய நண்பன் அல்ஹாபிழ் செய்யத் அஹமத் பதவி
ஆலிம் மஹ்லரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து அதிர்ச்சியில் திகைத்து போனேன். அற்புதமான அந்த நண்பரின் முகம்பார்த்து முத்தமிட்டேன். அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் திகைப்பில் நின்றேன்.
பள்ளி பருவ காலங்களில் அவரோடு இணைந்து நடந்த நிகழ்வுகள் மலரும் நினைவாக
என் மனதில் நிழலாடியது. திடீர் திடீர் என அவரை சந்திக்கும் வாய்ப்பை பெறுவேன். அப்பொழுதெல்லாம் அந்த பழைய பாசத்தை மறக்காமல் நலம் விசாரித்து துஆவும் செய்வார்கள்.
நான் அவரை சந்திக்கும்பொழுது பள்ளி பருவ காலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூறுவேன்.
சந்தோசத்துடன் கேட்டு அவர்களும் பழைய விசயங்களை பகிர்ந்து கொள்வார்கள். எங்கள் சம காலத்தில் வாழ்ந்த நண்பர்களில் இவரோடு யாரையும் ஒப்பிட முடியாத உத்தமராக திகழ்ந்தார்கள். அமைதியின் இலக்கணமாக திகழ்ந்தார்கள்.
இளமையில் ஒழுக்கம் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.உலக விசயங்களில் நாட்டத்தை விட்டு விலகி மறுமையின் விளைச்சலே
மேட்கொண்டார்கள்.
தன் இறுதி காலம் வரை இறைபணியே செய்து
ள்ளார்கள்.இவரின் மறைவு எங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியும் பெரும் இழப்பும் ஆகும்.
இறைவனின் இன்னாலில்லாஹி என்ற திருவசனத்தை கொண்டு ஆறுதல் அடைவோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக அமீன்....மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் மரியாதைக்குரிய முர்ஷித் அலி ஆலிம் மற்றும் குடும்பத்தினர்யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross