அன்பின் அட்மின் அவர்களுக்கு மாறி வரும் சம காலத்திற்கேற்ப
நீங்களும் இந்த இணையத்தை மாற்றியும் புதுமைகளை புகுத்தியும் மேலும் வாசகர்களுக்கு இலகுவான வகையிலும் வடிவமைத்து வண்ணமயமாக மேம்படுத்தி வருகின்றீகள் நன்றி வாழ்த்துக்கள்.
இதில் பிறை கணக்கு மட்டும் கொஞ்சம் நெருடலாக உள்ளது.
இதனை நம்மூரை மட்டும் சார்ந்தவர்கள் பார்த்தால் பரவாயில்லை.
உலகின் பலபாகங்களில் இருந்தும் நம்மவர்களுக்கு பழக்கமான நெருக்கமானவர்கள் என பலதரப்பட்டவர்களும் பார்க்கின்றார்கள் .
இந்த ஒட்டு மொத்த உலகிற்கும் ஒரே ஒரு பிறையை ஆம் சந்திரனை தானே அல்லாஹ் படைத்திருக்கின்றான் உங்கள் காயலுக்கு மட்டும்
மூன்று விதமான பிறைகள் உள்ளதே என்று வினவினால் ???
அல்லது
வெளியில் உள்ளவர்கள் நம்முடைய இந்த வேற்றுமையில் ஒற்றுமையின் இந்த விந்தையை பார்த்தால் ???நமக்கு தான் சங்கடமாக தோன்றும். மனகஷ்டம் மேலும் கசப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமையும்.
இதனால் இதை தொலை நோக்கி கருவியோடு மட்டும் நோக்காமல்,
நல்லெண்ணத்தோடு தொலை நோக்கு பார்வையுடன் பார்த்து
நாம் வாழும் நாடான இந்திய அல்லது தமிழக நாட்காட்டிகளில்
பெரும்பாலானவைகள் சுட்டிக்காட்டும் பொதுவான ஒன்றை அறிவியுங்கள்.
எல்லோரும் அவரவர் இருக்குமிடத்தில் உள்ள நாட்காட்டிகளை வைத்து
தான் அன்றடா காரியங்களை நிறைவேற்றி வருகின்றோம் அறிவீர்கள்.
அவசியமிருப்பின் இரு பெருநாள்களில் மற்றும் இம்மூன்று பிறைகளில் தேவையுடைய சமயம் வழமையாக செய்தியாக வெளியிட்டு வருவது போல் வருங்காலங்களிலும் தொடர்ந்து செய்யுங்கள்
தேவையுடவர்கள் அதனை உணர்ந்து அமல்களை செய்து கொள்வார்கள்.
இந்த தளத்தின் ஆரம்ப காலம் வாசகன் எனும் முறையில்
எமது மனதில் உதிப்பானதை எழுத்து வடிவில் கருத்தாக தந்துள்ளேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross