Re:...பட்டி மன்றங்கள் நடத்துங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[29 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42979
சமீபத்தில் நமதூரில் நடைபெற்ற இஸ்லாமிய விழா ஒன்றில் நபி வழியில் நடக்கும் திருமணங்களில் ''பெரிதும் விட்டுக் கொடுக்கவேண்டியவர்கள் ஆண்களா பெண்களா'' என்ற தலைப்பில் இருபெரும் உலமாக்கள் பேசினார்கள். திருமறை - நபியின் வழிமுறை சஹாபாக்கள் நெறிமுறை - இந்த கால நடைமுறை - இவற்றை மையமாக கொண்டு நடந்த ஒரு அற்புதமான பட்டி மன்றம்.
பெண்களுக்கு - திருமணத்தில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் மணமக்களுக்கு மிக தேவையான இன்றைய சூழலில் தலாக் பஸ்ஹு என்று சிறிய சிறிய காரணங்களுக்காக பிரிகிறார்கள். அல்லது 3 பிள்ளைகள் பெற்று அவர்கள் வளர்ந்து வாலிபமாக இருக்கும் நேரத்தில் அவர்களை பெற்றவர்கள் திடீரென்று உம்மாவை தலாக் சொல்கிறார்கள் - உம்மா வாப்பாவை பஸ்ஹு செய்கிறார்கள். எனவே நடைமுறையில் இவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் உலமாக்களுக்கு இருக்கிறது. ஒரு விழிப்புணர்வு பட்டி மன்றமாக அடிக்கடி பல்வேறு தலைப்புக்களுடன் பேசுங்கள். மனமாற்றங்களுக்கு அது வழி வகுக்கும்.இங்கே அகீதா பிரச்சினைகள் வராது. எல்லோருக்கும் பொதுவான விஷயம்தான் எல்லா இடத்திலும் பரவலாக பேசப்படும் ஒரு கசப்பான உண்மைகள்தான் இவை.
கால மாற்றம் அறிவியல் முன்னேற்றம் பெண்கல்வியில் அவர்கள் அடைந்துள்ள புதிய இலக்குகள் எல்லாமே இந்த மோசமான சூழலை உருவாக்கி இருக்கிறது. அவற்றை மாற்றியமைக்க முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் ரஹ்மத் செய்வான். வெறும் பேச்சுப் போட்டிகள் பரிசு பெறுவதற்காக நடைபெறும்போது அவற்றில் ஒரு வெறுமைதான் காணப்படும் வெற்றி பெற்றவர்கள் சந்தோஷப் படுவதும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் வருத்தப் படுவதும் தான் நடந்து கொண்டிருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross