Re:..corruption-commission-கோல்லேச்டின். posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (கோழிக்கோடு - கேரளா .)[24 March 2016] IP: 106.*.*.* India | Comment Reference Number: 43401
CORRUPTION-COMMISON-COLLECTION.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... ஹு.
நம் நாட்டில் உள்ளாட்சி ஊழியர்களிலிருந்து
பெரு அரசியல்வாதிகள்வரை நூறிலிருந்து
நூறாயிரம் கோடிகளையும் தாண்டி லஞ்ச ,ஊழல்கள் செய்து சிக்கினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வருவதைப் பார்கும்போது இந்த கட்டுரைக்கு
கருத்து தெரிவித்துள்ள சகோதரர் SHEIKH ABDUL QADER (RIYADH) அவர்களின் மக்கள் கோமாவில் உள்ளனர் என்ற கூற்று 100% உண்மையானதே.
அரசியல்வாதிகளிடமிருந்து நாம் நம்
இரு கரங்களையும் தாழ்த்தி வாங்கும்
இலவசங்களும் ஒரு வகையில் இலஞ்சமே.
இந்த இலவசங்களை (இலஞ்சங்களை) வாங்கிக்கொண்டு் என் தவறுகளை கண்டுக்கொள்ளாமல் மீண்டும்
என்னை தேர்ந்தெடு என்பதுதான் இந்த இலவசங்களில்
பொதிந்திருக்கும் தத்துவம். ஆக முதற்கட்டமாக மக்களாகிய நாம் இந்த இலவசம் என்ற பெயரில் நாம் வாங்கும் இந்த இலஞ்சத்தை வாங்காமல் ஒழிப்ப்போம்.
இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையுள்ள ஆதங்கங்கள் இந்த ஆக்கத்தில்
மிகுதியாக உள்ளதுபோல் அதிகாரிகளிடம்
இலஞ்சம் கொடுக்காமல் முறையான
காலவரைக்குள் , அலைகழிக்கப்படாமலும் நம்தேவைகளை எவ்வாறெல்லாம் பெற வழிவகை உள்ளதென்று கூடுதலாக கூறியிருந்தால் எம்போன்றவர்களுக்கு இன்னும் பிரயோஜனமாக இருந்திருக்கும்.
கட்டுரையாளர் இந்த கட்டுரையின் இறுதியில் "நல்லவர்களிடம் பொருப்புக்களை ஒப்படையுங்கள்"
என்று வைக்கும் முற்றுபுள்ளி
இந்த ஆக்கத்திற்கு சிறந்ததொரு வைரமகுடம்.
உள்ளாட்சிப் பொறுப்புக்களிலிருந்து இன்ன பிற பொறுப்புக்கள் வரை நல்லவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய நாம் அனைவருமே நாம்சார்ந்த வட்டார ஜமாஅத்தின் அங்கத்தினர்களாேவாம். ஒவ்வொரு ஜமாஅத்தினரும் தத்தமது ஜமாஅத்தினரில் உள்ள தகுதியானவர்களை தகுதியான பொறுப்புகளுக்கு ஏகமனதாக தேர்ந்தெடுத்து அனுப்புவதும் ஒரளவு "C C C" ன் கொடூர பிடியிலிந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்.
இவ்வாக்கத்தின் சகோதருக்கும், இதனை வெளியிட்டுள்ள இவ்விணையதள சகோதரர்களுக்கும் ... ஜஃஸாக அல்லாஹு க்ஹைரா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross