اللهم اغفر له وارحمه posted byM.S.Kaja Mahlari (Singapore)[06 May 2016] IP: 118.*.*.* China | Comment Reference Number: 43687
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பறக்காதுஹு.
எனது அருமை மருமகளின் கணவரும், எனது அருமை உஸ்தாத் பெருந்தகை மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சாஹிப் தம்பி ஆலிம் மஹ்லரி அவர்களின் மருமகனுமான அருமை மச்சான் அல்ஹாஜ் செய்கு நூர்தீன் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலையும், துக்கமும் அடைந்தேன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களை சந்திக்கும் போதெல்லாம் மார்க்க விசயமாகவும், உலக,அரசியல், குடும்ப விசயமாகவும் அன்பாகவும், பாசமாகவும், அதே நேரத்தில் கேலியாகவும், கிண்டலாகவும் பேசுவார்கள். எல்லோரிடத்திலும் பணிவாகவும், சகோதர வாஞ்சையுடனும் பழகுவார்கள்.
அன்னாரின் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் மனைவி, மக்கள், உற்றார்,உறவினர்கள், குடும்பத்தினர்கள் யாவருக்கும் எனதும்,எனது குடும்பத்தினர் அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் சபுர் எனும் பொறுமையையும், மகத்தான நற்கூலியையும் வழங்குவானாக ! கிருபையுள்ள ரஹ்மான் அன்னாரின் குற்றங்கள்,குறைகளை மறைத்து, அறிந்தோ,அறியாமலோ பாவங்கள் செய்திருந்தால் அனைத்தையும் மன்னித்து, அன்னாரின் மண்ணறையை ஒளிமயமாக்கி, விசாலமாக்கி, கேள்வி கணக்கை இலேசாக்கி சுவன பூஞ்சோலையாக ஆக்கி, நாளை மறுமையிலே கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் மேலான சபாஅத்தை கொடுத்தருளி, அன்னாரோடு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் குடியமர்த்துவானாக !!! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!!
இப்படிக்கு :
காஜா முஹ்யிதீன் மற்றும் குடும்பத்தினர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross