Re:...தன்னடக்கமான பதில்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[17 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43803
கருத்துக் கணிப்புக்கள் என்னதான் சொன்னாலும் இந்த தமிழகத்தை ஆளப் போகின்றவர்கள் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்களில் முக்கியமானவர்கள் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களும் கலைஞர் கருணாநிதி அவர்களும் தாங்கள் வாக்களித்த பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தது ஒரு வித்தியாசமான செய்தியை நமக்கு சொல்கிறது.
இத்தனை நாட்களாக நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இன்று அடக்கி வாசிக்கிறார்கள்.
''உங்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? நிருபர்கள்
ஜெயலலிதா அவர்களின் பதில் -
''இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் தெரிந்து விடும்''.
கருணாநிதி அவர்களின் பதில்
''தேவையான அளவுக்கு''
இவர்கள் பதில்கள் கருத்துக் கணிப்பை முழுமையாக நம்பவில்லை என்ற செய்தியைத்தான் நமக்கு சொல்கிறது.
நிதர்சன உண்மையும் அதுதான். வியாழக் கிழமை விடியட்டும் நல்லாட்சி மலரட்டும் எப்படி ஆட்சி செய்தால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் எப்படி ஆட்சி செய்தால் வீட்டுக்கு போகலாம் என்ற தகவலை மக்கள் அவர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள்.
நமக்கு கிடைத்த பாடமெல்லாம் பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழி இன்னும் செல்லுபடியாகிறது. இளைஞர்கள் இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி எழுதுவார்கள் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போகிறது. வாக்களிப்பு 100 சத விகிதம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தை தருகிறது. மாற்றம் முன்னேற்றம் என்ற சுலோகமும் எடுபடவில்லை.
இலவசங்கள் பண பட்டுவாடக்களை தடுக்க போதுமான சட்டங்கள் இல்லை. தேர்தல் கமிஷனுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்பது தெரிந்தாலும் அவர்கள் கைகள் கட்டப் பட்டுள்ளன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.
திருமங்கலம் சூத்திரம் திருநெல்வேலி சூத்திரம் இவைகளை தோற்கடித்திருக்கிறது அரவக்குறிச்சி சூத்திரம் தஞ்சாவூர் சூத்திரம் என்ற புதிய செய்தியும் நமக்கு கிடைத்துள்ளது.
5 வருடங்களுக்கு ஒருமுறை வந்துபோகும் ஜனநாயக திருவிழா என்று மட்டுமே இந்த தேர்தலை நாம் எடுத்துக் கொண்டால் மனம் நிம்மதி அடையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross