தம்பி முஹம்மது லெப்பையிடமிருந்து ஏதும் எதிர்பார்த்தால் பொறுமையுடன் காத்திருக்க தகுதியுண்டு ஆனால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்காக அல்லவா பொறுத்திருக்கச் சொல்கிறார்!
பொறுத்திருப்பது என்பது வேறு,எதிர்பார்ப்பது என்பது வேறு. எதிர்பார்ப்போம் என்று சொன்னால் அதை 100 சதவீதம் ஏற்றுகொள்ள தயாராக உள்ளோம்! ஆனால் பொறுத்திருங்கள் என்று சொன்னால் அது வந்துகொண்டிருப்பதில் கால தாமதம் என்ற பொருளில்தான் தங்கள் கருத்துப்பதிவு உள்ளது,
இதை தாங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று எங்களுக்கு விளங்க வில்லை!
நம் சமுதாயத்தை மதிப்பவர் ஜெயலலிதா அவர்கள் என்கிறீர்கள் அது உங்கள் நம்பிக்கையாக இருக்கட்டும்.அதுவே உண்மையாகட்டும்!
ஆனால் அடுத்தவர்களை,அடுத்த இயக்கதினர்களை எப்படி ஜெயலலிதா அவர்கள் மதிக்கிறார் என்பதை இன்று நடந்த நிகழ்வே ஒரு சாட்சியாக விளங்குகிறது!
பிராதான எதிர்கட்சியின் பிரதிநிதியாக பெருந்தன்மையுடன் ஸ்டான்லின் அவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கு கொண்ட அவருக்கு நாலாந்தர மனிதராக மக்களோடு மக்களாக இருப்பதற்குறிய இருக்கை ஏற்படுத்தப்பட்ட பண்பே ஜெயலலிதா அவர்களின் மதிப்பின் மாண்பு வெளிபடுகிறது.
நடுநிலை மனமிகு மக்களுக்கு முகசுளிப்பையுண் டாக்கி விட்டதோடல்லாமல் ஊர் அறிந்த ஒரு வேதனை வடு செய்தியாகவும் பரவிவிட்டது!
இதையே சற்று மாத்தி யோசிப்போம் ஜெயா அரசைத்தவிர வேறு அரசு பதவி ஏற்கும் விழாவில் தன் கட்சியின் மூத்த உறுப்பினரோ அல்லது கடைநிலை உறுப்பினரோ கலந்தது கொண்டார் என்று வைத்துக்கொள்வோம்.அவ்விஷயம் ஜெயா அவர்களுக்கு தெரியவந்தால்,அந்த உறுப்பினரின் நிலையை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
முடிவை தம்பி முஹம்மது லெப்பை அவர்களிடமே விட்டு விடுகிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross