Re:...மக்கி ஆலிம் நினவு பரிசு 2016 posted bymackie noohuthambi (kayalpatnam )[25 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43923
அதென்னவோ தெரியவில்லை இந்த மே மாதம் 16 ம் திகதியிலிருந்து பெண்களே எல்லா இடத்திலும் முன்னிலையில் இருக்கிறார்கள்.
வழக்கம் போல் இந்த வருடமும் +2 ,10வகுப்பு அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் நமதூரிலேயே முதலாவது இரண்டாவது இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ள மாணவ மாணவிகள் (இரண்டு பேருக்கு மட்டும்) எங்கள் நெஞ்சமெலாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்கள் நினைவாக ''மக்கி ஆலிம் நினைவு பரிசு 2016'' வழங்கி கௌரவிக்க இருக்கிறோம்.
இந்த பரிசினை எங்கள் வீட்டுக்கே வெற்றியாளர்களை அழைத்து நேர்காணல் செய்து அவர்கள் அனுபவங்களையும் கேட்டறிந்து மகிழ்ந்து அவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
இம்மாதம் 27,28,29 ம் திகதிகளில் மாலை 4.45 மணி முதல் 6.25 மணி வரை உங்கள் பரிசுகளை மக்கி ஹவுஸ் 51 புதுக்கடை தெரு காயல்பட்டினம் (அலைபேசி 9865263588) என்ற எங்கள் இல்லத்தில் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் வரும்போது தயவு கூர்ந்து உங்கள் வெற்றிக்கான சான்றிதழை XEROX COPY ATTESTED உங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கை எழுத்திட்டதையும் கொண்டு வாருங்கள்.
கணினி வல்லுநர் இன்று கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் BILL GATESஒன்றை சொல்வார். அவர் படித்தது 10ம் வகுப்பும் குறைவுதான் அனால் அவர் சொல்கிறார்.
எனது மக்களுக்கு எனது சொத்துக்களிலிருந்து எதையும் எழுதி வைக்க மாட்டேன் அதே நேரம் அவர்கள் படிப்பதற்கு எந்த எல்லையும் இல்லாமல் செலவு செய்து அவர்களை ஆளாக்க நான் தயங்கமாட்டேன்.
இந்த செய்தி மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கு காட்டும் சிக்னல் சமிக்ஞை என்ன?
1. நீங்கள் கோடீஸ்வரனாக வருவதற்கு பெரிய படிப்புக்கள் தேவை இல்லை. நீங்கள் வெற்றிக்கு முனைந்து அதில் தவறி இருந்தாலும் பரவா இல்லை. வேறு துறைகள் உங்களுக்கு திறந்தே இருக்கிறது.
கல்வியில் பின்தங்கிய பலர் விஞ்ஞானிகளாக அறிவியல் மேதைகளாக அரசியல் விற்பன்னர்களாக பிரதமர்களை முதல்வர்களை உருவாக்கியவர்களாக பிரதமர்களாக நாட்டின் ஜனாதிபதிகளாக கோலோச்சி இருக்கிறார்கள் இன்னும் இருந்து வருகிறார்கள். இன்றைய தமிழக முதல்வர் அவர்களின் இமாலய வெற்றியும் அதையே குறிக்கிறது.
நமதூரைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் அருளால் நீங்கள் என்னவெல்லாம் படிக்கலாம் என்று அதன் தலைவாயில்களை திறந்து காட்டுவதற்கு IQRA , KCGC என்ற இருபெரும் சக்திகள் உங்கள் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டிய பொருளாதார வசதிகளை செய்து தர உலகளாவிய காயல்நல மன்றங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் இரண்டு வருடங்களை பள்ளிக்கல்வி இல்லாமலே பட்டயப் படிப்பு DIPLOMA கல்வி கற்று அந்த இரண்டு வருடங்களையும் கூட உங்கள் வயதில் சேமிக்கலாம்.உங்கள் அனுபவங்களை அதிக படுத்தலாம்.
இப்போது கல்வி உங்கள் சாய்ஸ்..
ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவு திறக்கும் என்பது பழைய மொழி. ஒன்பது கதவுகளுமே திறந்துதான் இருக்கின்றன சற்று தள்ளிப் பாருங்கள் அவை திறந்து உங்களுக்கு வழி கொடுக்கும் உங்கள் கல்விக் கண் திறக்கும்.
நீ நடப்பதற்கு பாதை தேடாதே
நீ நடந்தால் அதுவே பாதை ஆகும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross