என்னதான் வழி ? posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[23 July 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44293
"நடப்பது என்ன" வாட்ஸப் குழுமம் நமதூருக்கு நன்மையான காரியங்களை கையிலெடுத்து செய்து வருகிறார்கள்! இதில் உள்ளூர் தொண்டுள்ளங்களும், அயல் நாடுகளில்வாழும் நல்லுள்ளங்களும் அடங்கும்!
அவர்களின் நன்மைகளின் பரிமாணம் படர்ந்து கொண்டே போகவேண்டும் என்கின்ற ஒரு நல்ல நோக்கத்தில்,நாசமாந்து கிடக்கும் நம் நகராட்சியை மீண்டும் நல்லதாக ஆக்கி , ஆக்கப்பூர்வமாகவும், ஊக்கப்பூர்வமாகவும் உயிர் கொடுக்க மாட்டோமா என்ற ஏக்கத்தின் வெளிப்பாட்டையே இந்த பிரசுரம் மூலமாக தெரிவித்து இருக்கினறார்கள்!
இது அந்த குழுமத்தின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்த நகராட்சியால் நசிந்துபோன காயல் மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் இதில் அடங்கும்!
நாம் என்ன செய்யலாம் எதிர்காலத்தில் என்ற ஒரு வினா எல்லோர் உள்ளத்தலும் உயர்ந்து நிற்பதை உணரமுடிகிறது.
நாம் என்னசெய்தாலும் ஏகாதிபத்திய ஆளுமை வர்க்கம் எல்லா உரிமைகளையும் எந்த விலை கொடுத்தாலும் வாங்கி,எங்கள் விரல் நுனி ஆணைக்கு அணுவளவும் அசையாத தலையாட்டி பொம்மைகளாக
ஆக்குவோம் என்கின்ற சபதத்தையும் செய்து காட்டியது மட்டுமல்ல இனியும் செய்ய தயாராக இருக்கின்ற இரும்பு வலிமை படைத்த இறுமாப்புடையவகள் முன் எறுப்புக்கொப்பான நம்முடைய வலிமையை வைத்துக்கொண்டு என்ன தான் செய்ய முடியும்!
சென்ற நகராட்சி பொறுப்பேற்று ஒருவாரத்திற்குள் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் எந்த தவற்றையோ, ஊழலையோ மனமறிந்து செய்யமாட்டேன் என்று மேஜை உடைய அடித்து, நம் மார்புகள் அதிர்ச்சியாகும் அளவிவிற்கு அலறியபடி ஆகாயம் இடிய சத்தம் போட்டு சத்தியம் செய்த அந்த சத்தியவான்கள் எத்தனை நாட்களில் காணாமல் போனார்கள்!
எங்கும் காணாமல் போகவில்லை, ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்தார்கள் எல்லா வகை பாதுகாப்புகளையும் பெற்றுக்கொண்டு!
இதற்கு வழிதான் என்ன ?எனக்கு தெரிந்த ஒரு யோசனை.இது சரியா?தவறா?தீர்மானிப்பதை நடுநிலை நாயகர்களிடம் விட்டுவிடுகிறேன்!
அதாவது,ஒவ்வொரு வார்டிலும் அத்தனை வாக்காளர்களும் ஒரு காகிதத்தில் கீழ் கண்டவாறு வாசகத்தை அமைத்து எழுதவேண்டும்,
நீங்கள் உங்கள் கடமைகளை ஒழுங்கான முறைப்படி செய்யத்தவறி ,அதனால் நாங்கள் பாதிப்புக்குளாகும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப்பால்,பெரும்பான்மையினரின் முடிவின் படி உங்களை தகுதி நீக்கம் செய்ய எங்களுக்கு முழு உரிமை உண்டு.இந்த நிபந்தனைக்கு நான் முழு ஒப்புதல் அளிக்கிறேன்!
என்ற உறுதிமொழியை அத்தனை வேட்பாளர்களிடம் முதலிலேயே பெற்றுக்கொண்ட பிறகே நாம் வாக்களித்தால் என்ன என்பதே இந்த எளியோனின் கருத்தாகும்!
பரிசீலித்துதான் பார்ப்போமே,பயன் கிட்டினால் இது ஒரு முன் மாதிரியாக நம்மூருக்கு மட்டுமல்ல நம் தமிழ் நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு வழிகாட்டியாகுமல்லவா?அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் ! .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross