என்ன செய்ய? நமதூரில் பெரும்பான்மையான மக்களுக்கு விசயம் நடந்தால் போதும். குவாலிட்டி பார்பதற்கெல்லாம் எங்க நேரம் இருக்கு.
நல்ல கலரி சாப்பாடு சாப்டமா? மாலையில் பீச்க்கு போய் கஞ்சி குடிச்சமான்னுதான் இருக்கோம்.
அதையும் மீறி சிலர் குவாலிட்டியான ரோடு வேண்டும், கேரன்ட்டி வேண்டும், பேவர் ப்ளாக் ரோடு வேண்டாம்ன்னும், லஞ்சத்த விரட்டனும்ன்னு குரல் கொடுத்தால் பெரியவர்களை மதிக்காதவர்கள்ன்னு மிகச் சிலரால் திட்டமிட்டே பரப்பப்படுகின்றது.
இதையும் நடுநிலை உள்ள பெரியவர்களும், இளைஞர்களும் உண்மையிலேயே இவர்கள் பெரியவர்களை அவமதிப்பவர்கள் தானோ என்று நினைத்து விடு கின்றார்கள்.
கடந்த காலத்தில் நம் நகர்மன்றதின் வங்கி கணக்குகளில் ஒரு கணக்கில் நில் பேலன்ஸ் என்று கமிஷனர் சேர்மன் இடம் சொல்கின்றார். சம்பந்தபட்ட வங்கி கிளையில் நேரடியாக சேர்மன் ஆபிதா அவர்கள் நேரில் சென்று விசாரித்த போது ரூபாய் 83 லட்சம் இருப்பதாக கண்டுபிடித்தார்கள்.
கமிஷனர் சொன்னதை அனுசரித்து நம்பியிருந்தால் இந்த 83 லட்சம் ரூபாய் கதி அதோ கதிதான்.
இவ்விசயங்கள் நன்றாகத் தெரிந்திருந்தும் இதற்க்கெதிராக நம்மால் கடந்த காலத்தில் தேர்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாய் திறவா மவுனியாகத்தான் இருந்தார்கள. மவுனியாக இருந்தது மட்டுமல்லாமல் இந்த மாதியான முறைகேடுகளை நடக்க விடாமல் இமை மூடாமல் பார்த்து கொண்டிருந்த சேர்மனுக்கு எதிராக இல்லாத பொல்லாத அவதூருகளையும் பரப்பி வெற்றியும் கண்டுள்ளார்கள். இப்படி எத்தனையோ அடுக்கி கொண்டே போகலாம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு இனி வரும் தேர்தலில் சென்ற முறை கவுன்சிலர்களாக சென்றவர்களை இந்த முறை அனுமதியாமல் இருப்போம்.
சும்ம டைமை பாஸாக்காமல் அநீதிக்கெதிராக நீதியின் குரலாக நம் குரல் உரக்க முழங்குவதோடு செயலிலும் இறங்குவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross