Re:...தேர்தல் அடிக்கடி வரட்டும் சாலைகள் சீராகட்டும் posted bymackie noohuthambi (kayalpatnam )[03 October 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44761
அது ஒரு தேர்தல் காலம். ஜனதா கட்சி சார்பாக ஜெபமணி என்பவர் வேட்பாளராக களத்தில் நிற்கிறார் அவருக்கு வயது 70-80 இருக்கும். துக்ளக் சோ அவர்கள் இவருக்கு வாக்கு சேகரிப்பதற்கு வருகிறார். அவர் உரையாற்றுகிறார்.
வாக்காள பெரு மக்களே வயது முதிர்ந்த நெல்லை ஜெபமணி இங்கு திருச்செந்தூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டி இடுகிறார். உங்கள் தொகுதியில் வேக வேகமாக சாலைகள் சீரமைக்கப் படுகின்றன. நலத்திட்டங்கள் படு வேகமாக செயல்படுத்தப் படுகின்றன. தேர்தல் வந்தால் இதெல்லாம் நடைபெறும் என்பது உங்களுக்கு தெரியும். 5 வருட காலங்கள் ஒரு உறுப்பினர் பதவி வகிப்பார். இப்போது உங்கள் வாக்குகளை பெற்று சட்டமன்றத்துக்கு போகிறவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு உங்கள் ஊர் பக்கமே வரமாட்டார். எனவே சாலை வசதிகள் அப்படியே நின்று விடும். ஜெபமணியை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினால் அவர் இன்னும் ஒரு வருடமோ இரண்டு வருடமோதான் உயிருடன் இருப்பார். அவர் போய் விட்டால் மீண்டும் இந்த தொகுதிக்கு இடை தேர்தல் வரும். சாலை வசதிகள் நலத்திட்டங்கள் மீண்டும் வேக வேகமாக நடக்கும். எனவே உங்கள் தொகுதியில் எல்லா வசதிகளும் கிடைக்க நீங்க நெல்லை ஜெபமணிக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள். என்றார். மக்கள் வெள்ளம் சிரிப்பலையில் மிதந்தது.
ஆனால் உண்மை அப்போதும் அதுதான் இப்போதும் அதுதான். மழை வருமுன் தேர்தல் முடிந்து விடும். அடுத்து மழை வந்தவுடன் சாலைகள் மீண்டும் முன்புபோல் குண்டும் குழியுமாக ஆகி விடும். இது ஒரு தொடர்கதைதான்.
இப்போது நகர் மன்ற தேர்தல் நடக்க விருக்கிறது. வெற்றி பெற்று செல்பவர்கள் 5 வருடத்துக்குள் என்னென்ன செய்தார்கள் இனி என்னென்ன செய்வார்கள் என்று நமக்கே தெரியாது. எல்லா ஊர்களின் நிலைமையும் இதுதான். நான் காயல்பட்டினத்தை சொல்வதாக யாரும் நினைத்தால் அது அவரவர்கள் எண்ணத்தை பொறுத்தது.
நமது நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள் நீடித்த ஆயுளுடனும் உடல் நலத்துடனும் சேவை செய்ய நாம் து ஆ செய்வோம். மற்றப்படி GUARANTEE WARRANTY எதுவுமே கிடையாது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அரசும் மதிக்கவில்லை மத்திய அரசும் மதிக்கவில்லை. எனவே எந்த விஷயத்துக்கும் நீதி கேட்டு நாம் நெடிய பயணம் செல்ல தேவை இல்லை நீதிமன்ற படிக்கட்டுகள் ஏற தேவை இல்லை. அதனால் எந்த பயனும் இல்லை பிரயோஜனமும் தராது. அல்லாஹ் ஒருவனிடமேதான் அதற்கான தீர்வு இருக்கிறது.
ALLAAHUMMA LAA THUSALLITH ALAINA MANN LAA YAKHAAFUKA VA LAA YARHAMNAA ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross