முதல் ஓவியர்
&
எல்.எஸ்.மாமா மரணத்தினூடே என்னுள் எழுந்த சிந்தனைகள்.
ஏ.எல்.எஸ். மாமா என்றதும் நம் சமுதாயத்தின் குறைகளை அகற்றவும், நம் சமுதாய முன்னேற்ற திற்காகவும் நம் இணைய தளத்தில் எழுதிய ஆக்கங்களைத்தான் என் மனதின் ஒளி ஒவியத்தில்
நான்காண்கின்றேன்.
தன் முதுமையான வயதில் மாமா எழுதிய அறிவுரை புகட்டும் எழுத்துக்களில் 18 வயது நிறம்பிய ஆரோக்யமான வாலிபன் உறக்க கூவினால் எப்படி கம்பீரமான ஒலியோசை வெளிப்படுமோ அதற்க்கு ஈடானா தரம் அவர்களின் ஆக்கங்களிள் காண முடிந்தது.
உருவ ஒவியங்கள் அவர்கள் வரைவதில்லை என்று நான் கேள்விப்படும் போது அவர்களின் நிறைவான ஈமானை நமக்கு உணர்த்துகின்றது.
வேலை வாய்ப்பு , இன்ன பிற சமுதாய நலன் சார்ந்த தகவல்களை சேகரித்து பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் பிறர் அறிய
தொங்க விடுவது என்பது ஏ.எல் எஸ்.மாமா அவர்கள் சமூகத்தின் மேல் பொதுநலம் கொண்டவர்கள் என்பதை உணர்த்துகின்றது.
ஏ.எல்.எஸ்.மாமா, எஸ்.எம்.பி. மஹ்மூத் ஹுஸைன் மாமா, எஸ்.கே.மாமா
போன்ற சான்றோர்களின் இழப்பென்பது நமதூரில் நடமாடிய நன்னறிவுப் புதையல்களின் பேரிழப்பு.
நாம் இழந்த இவ்விழப்பின் வெற்றிடத்தை நாம் நிறப்ப வேண்டுமானால் அவர்களின் அறிவுக்கும், சுயநலமற்ற முற்றிலும் பொது நலம் மட்டுமே அவர்களுள் குடிகொள்ள முதல்மூல காரணமாக இருந்தவை அவர்கள் வாசித்த நூல்களே என்பதில் எல்லின் முனையளவும் சந்தேகம் இல்லா உண்மை. வருங்கால காயலில் இது போன்ற மாமாக்கள் உலா வரவேண்டும் என நினைப்பவர்கள் இவர்கள் படித்து பாதுகாத்த நூல்களையும், இவர்கள் படைத்த ஆக்கங்களையும் பொதுவுடமை ஆக்குவதன் மூலமே வருங்காலங்களில் இவர்கள் போன்ற பல மாமாக்களை உலா
வரச் செய்து நம் காயலுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பல பயன்கள் கிடைக்க ஏதுவாக அமையும்.
இம் மூன்று மாமாக்களில் மூன்றாமவதாக நான் குறிப்பிட்டிருக்கும் எஸ்.கே.மாமாவின் இரண்டாம் மகளை நான் மணமுடித்திருக்கும் காரணத்தால் எஸ்.கே.மாமாவோடு நெருங்கி உறவாடிய பாக்கியம் நிறைந்த அனுபவங்கள் எனக்குண்டு.
என் அனுபவமின்மையால் சிறிது எதிரும் புதிருமாக தொடங்கிய எங்கள் உறவு நாளடைவில் அன்பாக மாறி இறுதியில் பால்ய நண்பர்களின் நட்பு போல் முற்றுப் பெற்றதென்பதும், ஒரு விசயத்திற்காக ஒருஉறவினரிடத்தில்
என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது அவன் என் மகன் என்றுச் சொன்னதும் என் வாழ்வில் மறக்க முடியுதா பசுமையான நினைவுகள்.
என்னுள் புதைந்து, மறைந்திருந்த திறமைகளை அவர்களின் சாதாரணமான பேச்சுக்கள், எழுத்துக்கள், அவர்கள் வாசித்த புத்தங்கள், கலந்துரையாடல், பல சமயம் மாமாவோடு ஒன்றாய் அமர்ந்து தொலைக்காட்சி மூலமாக பார்த்தும்,
கேட்டும், கூடுதலாக தொலைநோக்கு பார்வையுடன் எனக்கு அவர்கள் தந்த விவரங்கள் போன்றவற்றின் மூலமே தோண்டி எடுத்து என் கண் முன்னே நிறுத்தினார்கள் என்றால்
அது மிகையில்லா உண்மையே.
ஆக இம்மூன்று மாமாக்களின் பாவாபிழைகளை கருணையாளன் அல்லாஹ் மன்னித்து , இம்மேன்மக்கள் சமுதாயத்திற்க்காக செய்த சேவைகளையும், இன்ன பிற நல் அமல்களையும் ரப்பில் ஆலமீன் ஏற்றுக் கொள்வானாக! மண்றை மருமை வாழ்க்கையில் துயரங்கள் இல்லாமல் ஆக்கி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் சுவன சோலைகளில் பிரவேசிக்கச் செய்வானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross