Re:...இந்த கட்டுரை செல்ல வேண்டிய இடம் மிக சமீபம் சேர வேண்டிய இடம் மிக தூரம் posted bymackie noohuthambi (kayalpatnam )[31 October 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44854
அருமையானதொரு கட்டுரையை வழங்கியுள்ள சகோதரி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
நமது பெண்களில் எத்தனை பேருக்கு இஸ்லாம் இவ்வளவு மகத்துவம் பெண்களுக்கு அளித்திருக்கிறது என்று தெரியும். மோடியை விடுங்கள். விழித்திரையை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகும் என்று பூனைகள் நினைக்கும். ஓநாய்கள் இரத்தம் குடிக்க காத்திருக்கும்.
இந்த கட்டுரை செல்ல வேண்டிய இடம் தி தமிழ் ஹிந்து நாளிதழில் வரும் ''பெண்கள் இன்று'' என்ற பகுதிக்கு. இதை அனுப்புங்கள் நிச்சயம் அவர்கள் அதனை வெளியிடுவார்கள். ஏனென்றால் தமிழால் இணைவோம் என்றும் உண்மைக்கு முதலிடம் என்றும் மார்தட்டுபவர்கள். ஒரு நூற்றாண்டுக்கு மேலான பாரம்பரியம் மிக்க நாளிதழ் அது. சமஸ் போன்றவர்கள் துணிச்சலாக எழுதும் கட்டுரைகளை தாங்கி வரும் நாளிதழ். நிச்சயம் உங்கள் கட்டுரையை வெளியிட்டு பெண்களுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த கட்டுரை போய் சேர வேண்டிய இடம் வெகு தூரம். முதலில் இதன் ஆங்கில அல்லது ஹிந்தி ஆக்கம் நமது நாட்டின் பிரதமருக்கு போய் சேர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபைக்கும் செல்ல வேண்டும். தூங்குகிறவர்களை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
உலகத்துக்கு இஸ்லாம் பெண்களுக்கு தரும் உரிமைகள் பற்றி தெரியாமல் இல்லை கைப் புண்ணை பார்ப்பதற்கு கண்ணாடி தேவை இல்லை. ஆனாலும் இந்த உண்மைகளை சொல்வது திருமறை அதை கொண்டுவந்த நபிகள் நாயகம். இதுதான் அவர்களின் ஆதங்கம். என்ன செய்வது இஸ்லாத்தை ஊதி அணைக்க நினைப்பவர்களுக்கு ''ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை'' என்பது புரியாமலா இருக்கும்.
இப்படி விழிப்புணர்வு கட்டுரை எழுத கூடிய சகோதரிகள் எத்தனை பேர் இந்த ஊரில் இருக்கிறார்கள். பெண்கள் இஸ்லாமிய கல்லூரிகள், பெண்கள் கலை கல்லூரி எல்லாம் நிறைந்து இருக்கும் இந்த ஊரில், பல பட்டதாரிகள் ஆலிமாக்களாகவும் அப்ஸலுல் உலமாக்களாகவும் முதுநிலை பட்டதாரிகளாகவும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவிகள் எத்தனை பேர். அவர்கள் சிந்தனைகள் இப்படி ஏன் ஏற்றம் பெறவில்லை. இந்த ஊரில் ஒரே ஒரு உம்மு நுமைரா மட்டும் இந்த பெண்கள் செய்தியை கட்டுரையாக வெளிக் கொண்டு வந்தால் போதுமா..உங்களால் ஏன் உங்கள் சக மாணவிகளை இப்படி ஆசிரியைகளை எழுத்தாளர்களை உருவாக்க முடியவில்லை..
ஷா பாணுக்கள் சாயிரா பாணுக்கள் நீதிமன்றங்களின் படிக்கட்டுக்களில் ஏறி இறங்குகிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவு இல்லை என்பதை விட அவர்களுக்கு நமது சமுதாயம் சரியான வழி காட்டல்களை வழங்கவில்லை அவர்கள் உணர்வுகளுக்கு வடிகால்கள் அமைத்துக் கொடுக்க வில்லை என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். இது ஒரு நாணயத்தின் மறுபக்கம்.
நமதூரில் உலமாக்களின் கவலை தினசரி இந்த மணவிலக்கு பற்றிய செய்தியாகவே இருக்கிறது.ஷரியத் கோர்ட் அமைத்து விடியலை தேடி நிற்கும் அபலைகளுக்கு நாம் மறு வாழ்வு கொடுக்க என்ன செய்திருக்கிறோம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் சொல்லும் ஆண்களின் ஆணாதிக்க வெறியை நாம் கண்டுகொள்ளவில்லை ஒரு பெண்ணை தலாக் சொல்லிவிட்டு வந்தவனை அடுத்து முஹல்லாவில் மறுமணம் முடிக்க நாம் அவனிடம் குறைந்த பட்சம் அவன் குடி பெயர்ந்து வந்த முஹல்லா பள்ளி வாசலில் இருந்து ஒரு NO OBJECTION CERTIFICATE கூட கேட்பதில்லை. வேதனையில் இருக்கும் பெண்கள் இப்படி நீதிமன்றம் போக இங்கு வழி இல்லை. நாம் கட்டிக் காத்துவரும் கலாச்சாரம் அதற்கு தடையாக இருக்கிறது. அதுதான் அவர்களுக்கு அரணாகவும் இருக்கிறது.
JUSTICE DELAYED IS JUSTICE DENIED. அது நீதிமன்றத்துக்கு மட்டுமல்ல நமது சமுதாய ஜமாத்துகளுக்கும் பொருந்தும். நபிகள் நாயகம் ஒரு து ஆ வை நமக்கு கற்று தருகிறார்கள். வறுமையை விட்டும் குப்ரை விட்டும் என்னை பாதுகாத்து அருள் இறைவா...என்ன அர்த்தம் வறுமை கொடியது அது நம்மை குப்ரு வரை கொண்டு சேர்த்துவிடும். விரக்தியில் இருக்கும் அநியாயமாக தலாக்கிடப் பட்டு மறு மணத்துக்காக ஏங்கி நிற்கும் பெண்களின் கதையும் இதுதான். அல்லாஹ் நம் பெண்களை காப்பாற்றுவானாக..
லேடிகளுக்கு இஸ்லாத்தில் நல்ல பாதுகாப்பு இருக்கிறது என்று மோடிகளுக்கு நன்கு தெரியும். நமது பலவீனங்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் அவ்வளவுதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross