Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[02 November 2016] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44860
பயனுள்ள தகவல்கள் தான்.. என்ன பிரயோஜனம். ஒரு ஆணியையும் பிடுங்க மாட்டாங்க.
முன்பு, புரட்டிப் போட்டு, ஊரையே மிரள வைத்த மழையினால் நாம் பெற்ற பாடம் தான் என்ன..? நம் நகராட்சி இதுவரை செய்த செயல்கள் தான் என்ன..?
த.மு.மு.க முதல் சிறிய.. சிறிய அமைப்புகள் வரை, நகராட்சிக்கு சென்று மனு கொடுத்துவிட்டு, ஊரை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்து விட்டு வந்ததோடு முடிந்து விட்டது.
ஏதாவது ஒரு நடவடிக்கையை நகராட்சி செய்ததா?? யாரும் தான் திரும்பி கேட்டார்களா..? மழை நீரும் வடிந்து, ஊரும் நார்மலுக்கு வந்து விட்டது, வருடங்களும் ஓடி விட்டது, அனைவர்களும் பிரச்சனைகளை மறந்து விட்டார்கள். எதுவரை..?
திரும்ப எப்போ மழை வருமோ, அப்போது இது மாதிரியான அறிவிப்புகள், பாதிப்புகள், மனு கொடுக்கும் வைபவங்கள் தொடரும்.
மீண்டும் பலத்த மழை வரும், ஊர் பூராவும் மூழ்கும்,(இறைவன் காப்பானாக), மக்கள் கொடுமையை அனுபவித்து, இதில் கொடுக்கப்பட்ட எங்களை அழைத்து கொடுமைகளையும் பாதிப்புகளையும் கூறினால் என்னதான் செய்வார்கள்..?
பப்பரப்பள்ளியில் இந்த நாளுக்கு பின்பு குப்பைகளை கொட்டினால், நகராட்சி வாகனத்தை மறிப்போம், போராடுவோம் என்று ஆணையரிடம் மனு கொடுத்து விட்டு சூளுரைத்தோம். ஏதாவது நடவடிக்கை உண்டுமா..? ஒரு ஆணியையும் பிடுங்க வில்லை. பக்கத்து ஊர்க்காரன் எல்லாம் இங்கு வந்து குப்பையை கொட்டிக்கொண்டு சொல்லுகிறான்.
மக்களின் மறதி தான் ஆள்பவர்களுக்கு ஒரு பலமே.
நம் நகராட்சி தனி அதிகாரியாவது மக்கள் நலனுக்காக பாடுபடுவர் என்று நம்புவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross