இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[22 November 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 44919
சிறு வயதில், அவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள முஹ்யித்தீன் பெரிய கல் தைக்காவில் எங்கள் செய்ஹலிமா லெப்பையிடம் ஓதுவதற்காக கொச்சியார் தெருவிலுள்ள என் வீட்டிலிருந்து வரும்போதும், பள்ளி முடிந்து திரும்பச் செல்லும்போதும், தவறாமல் கண்ணில் படும் இருவர் (1) மர்ஹூமா அவர்கள், (2) மர்ஹூமா அவர்களின் தாயார் மம்செய்து கம்மா அவர்கள்.
என்னிடம் சில சொற்களாவது பேசாமல் பள்ளிக்குள் செல்லவே விட மாட்டார்கள் இவ்விருவரும்.
அவர்களது பழைய வீட்டின் முகப்பில் ஒரு ஒற்றைப் பனைமரம் கம்பீரமாக நிற்கும். அதைப் பார்த்து பயப்படுவோம். எனவே, இரவு நேரங்களில் அவ்வழியே செல்வதைத் தவிர்த்துக்கொள்வோம்.
ஆனால், எந்த பயமுமின்றி அங்கேயே இருந்த இவர்களது நெஞ்சுரத்தை என்னவென்று சொல்வது?
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் ஜாஃபர் காக்கா, செய்யித் இப்றாஹீம் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross