செய்தி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வசந்த காலைக்கதிரவன் உதயமாவானா? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[15 February 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45231
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது!
இந்த நாட்டில் நீதி நீர்த்துவிடவில்லை,நெடிய காலங்களை எடுத்தாலும் அது நிச்சியம் நீதியை தந்துவிடும் என்பதற்கோர் சரித்திர சான்றே இந்த தீர்ப்பு!
இத்தீர்ப்பிலிருந்து தமிழகம் பல பாடங்களை பெற்றிருக்கிறது.
முதலாவது,பெங்களூரின் தீர்ப்பிலிருந்தே,நாம் உஷாராக இருந்திருக்க வேண்டும்.இருக்கவிடவில்லை இந்த அரசியல்வாதிகள், பணத்தால் பாமர மக்களையும், பக்தியால் பல சஞ்சல மனமுடையவர்கள் உள்ளத்திலும் ஒரு பரிதாபம் புதையுண்ட பெண்மணியாக "அம்மா"என்ற அடைமொழியின் "அனுதாபம்"அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து வழிந்தோடியது!
தெய்வத்திற்கு ஒரு தனியொரு மனிதன் தண்டனை கொடுக்க முடியுமா?என்கின்ற கூப்பாடு திக்கெட்டும் இத்தமிழகத்தில் ஒலித்தோங்கியது!
இதற்குள்ளேயும்,நிதானமாகவும்,நடுநிலைமையாகவும் சிந்தித்து வாக்களித்த வெகு சிறப்பான வாக்காளர்களின் வெற்றிக்கிரீடம் இமியளவு இடைவெளியில் பிசகி பறிபோனது என்பதும் உலகறிந்த உண்மை!
இன்றைக்கு இந்த அளவிற்கு தமிழகம் சீரழிந்து நிற்கிறதே சிறிது சிந்தித்தீர்களா? இலை வெற்றிக்காக வரிந்து கட்டிய, வருங்காலத்தை கணிக்கத்தெரியாத அருமைமிகு ஏமாளியாகிய வாக்காளப்பெருமக்களே!
திரு கோவாலு அவர்கள், தன் அலுமாரியை நிறைத்து விட்டு,அறுசுவை "அல்வாவை"சுவைக்க கொடுத்து, அப்படியே துரோக கயிற்றால் சுருக்குப்போட்டு இழுத்துகவிழ்த்தபாடத்தைக்கூட,கவிழ்ந்தபின்னர்தானே உணர்கிறீர்கள் உத்தம அரசியல் கட்சி தலைவர்களே. அவரின் அந்த கபட நாடகத்தை அன்றே நீங்கள் அடையாளம் கண்டிருந்தால்,
இன்று அமைதியான,அழகான,எந்த அலைக்கழிப்பும், படபடப்பும் இல்லாத ஒரு ஆட்சி இளைய தலைமையில் தழைத்தோங்கி ஜொலித்துக்
கொண்டிருக்குமே!
இனி எந்த பிரிவு பெரும்பான்மையை நிரூபித்தாலும்,எந்த நேரமும், எல்லாப்பேரமுமென்ற"கத்தி" தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கும்,
சில நாட்கள்,சில மாதங்கள்கூட இது தாங்காது என்று மருத்துவர்கள் கைவிட்ட கேன்சர் நோயாளிதான் இன்றைய தமிழக ஆட்சி நிலை!
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிற அல்லாஹ் ஒருவனே ஒரு நிலையான,நிம்மதியான,நசுக்கத்துடிக்கும் பாதகர்கள் பிடியிலுள்ள சமுதாயத்திற்குபாதுகாவலான ஆட்சியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
அந்த அருமையான நாளுக்குறிய காலைப்பொழுது விடியத்தான் போகிறது,வேதனைகள் விலகத்தான் போகிறது, உன்னதமான,வசந்தமான காலைக்கதிரவன் உதயமாகத்தான் போகிறான்! ஒருசிலகனப்பொழுது பொறுத்திருப்போம்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross