நல்ல இளவல்! posted byS.K.Salih (Kayalpatnam)[15 July 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45673
முகநூலில், இரு சக்கர வாகனங்களை இளைஞர்கள் தறிகெட்டு ஓட்டுவதைக் குறிப்பிட்டு பலர் பேசியிருக்கின்றனர்.
ஆனால், அன்பு இளவல் முஜாஹிம் - தலைக்கவசம் அணிந்து, பக்குவமாகவே வாகனத்தை ஓட்டியிருக்கிறார். கோழிக்கோட்டிலிருந்து மஞ்சேரி சென்ற பேருந்து ஓட்டுநர் நேரத்தை சேமிப்பதற்காக தனது பேருந்தைத் தறிகெட்டு ஓட்டியதாலேயே இவ்விபத்து நேர்ந்ததாகவும், பேருந்து ஓட்டுநர் உடனடியாக வண்டியை விட்டும் இறங்கி, தப்பி ஓடிவிட்டதாகவும், இக்காட்சிகளைக் கண்ட பொதுமக்கள் பேருந்தை கல்வீசி உடைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆக, இந்த இளவல் மீது எந்தத் தவறுமில்லை என்றாலும் விதி விளையாடியிருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது.
இந்த இளவல், கோழிக்கோட்டில் பல பொதுநல அமைப்புகளில் பொறுப்பாளராக அங்கம் வகித்து, எண்ணற்ற சேவைகளை தன் இளம் வயதிலும் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க இவ்விளவல் தனது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டான்.
அவரும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்பு இளவலின் பிரிவால் தாங்கொணாத் துயரத்திலிருக்கும் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross