Re:...எழுச்சி மிக்க பேச்சாளர் posted bymackienoohuthambi (colombo)[05 October 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45822
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் சங்கை மிக்க சதீதுதீன் மௌலவி அவர்களின் பேச்சை ஈமான் எழுச்சி மாநாட்டிலே கேட்க முடிந்தது.
அவர் எழுந்து நின்று பேச ஆரம்பித்தபோது ஒரு சிம்மக் குரல் ஒலித்தது. அவருடன் கருத்து வேறுபடுபவர்களும் அவரது பேச்சின் கம்பீரத்தை அவரது ஆளுமையை ரசிப்பார்கள். அவர்கள் சொன்ன ஒரு செய்தி இன்னும் நினைவலைகளில் வந்து செல்கிறது.
''அவ்லியாக்கள் பக்கத்தில் நம்மை அடக்கினால் நமக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்குமா?'' என்பது கேள்வி .ஆலிம் அவர்களின் அற்புதமான பதில் அருமையாக காற்றலையில் மிதந்து வந்தது. இதோ நான் விசிறியால் எனக்கு காற்று வரவேண்டும் என்பதற்காக வீசிக் கொண்டிருக்கிறேன். நீ என் அருகில் இருக்கிறாய். உனக்கு அந்த விசிறியின் காற்று படுகிறதா? ஆம் என்கிறார் கேள்வி கேட்டவர். அப்படியானால் இதுதான் உன் கேள்விக்கு பதில். உனக்கு காற்று வரவேண்டும் என்று விசிறியால் வீசவில்லை. என்றாலும் என் விசிறியின் காற்று உனக்கும் கிடைக்கிறது. இதே போல் நீயும் அவ்லியாக்களின் பக்கம் அடக்கம் செய்யப் பட்டால் உனக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை உன்னை அறியாமலே உனக்கும்
கிடைக்கும், போ..என்று சொன்னார்கள். கேள்வி கேட்டவன் மூக்கில் விரல்வைத்து ஆச்சரிய பட்டான்.
இப்படி மிக அற்புதமான நாவன்மை பெற்றவரை இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு பேச்சாளராக தேர்ந்து எடுத்துள்ள விழா குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். எல்லா நிகழ்ச்சிகளும் சீரும் சிறப்புமாக நடந்து முடிய அல்லாஹ் அருள் புரிவானாக.
இந்த கல்லூரியை உருவாக்கிய ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்கள் உடல் நலமில்லாமல் இருந்தார்கள் மருத்துவ மனையில் சந்தித்து பேசி விட்டு வந்தேன். தைரியம் மிகுந்தவர்கள் கூட நோய் ஏற்படும்போது சற்று தளர்ந்து விடுகிறார்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கும் இந்த மத்ரஸாவின் தலைமை ஆலிம் காஜா மொஹிதீன் ஆலிம் காஷிஃபி அவர்களுக்கும் நல்ல உடல் நலத்தை கொடுத்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அளிப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross