செய்தி: கத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உங்களில் ஒருவன் நான் இரு கண்களை பேதம் ஏன் நானும் மாணவன்தான்,,, posted bymackienoohuthambi (colombo)[12 October 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45828
அருமையான பதிவு விளக்கங்கள். சென்ற ஆண்டு நான் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது எனக்கு ஒரு உற்சாகத்தை தந்தது. மாணவர்கள் ஆசிரியர்கள் உறவுகளை சொல்லும்போது ஒரு திரைப் பட பாடல் நினைவுக்கு வந்தது .அது நூற்றுக்கு நூறு என்ற திரைப் படம் ஆசிரியரும் மாணவர்களும் சுற்றுலா பயணம் செல்வார்கள் அப்போது ஆசிரியர் உற்சாக மிகுதியால் மாணவர்களுக்கிடையே ஒரு பாட்டுப் பாடுவார்...
''உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் நானும் மாணவன்தான்'..
நானும் என்னை ஒரு மாணவனாகவே நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிகளில் விடை அளிக்க முயன்றதும் அதற்கிடையில் சிலர் முந்திக் கொண்டு நான் சொல்ல இருந்த விடையையே சொல்லி பரிசுகளை தட்டிச் சென்றார்கள் சுவையான நிகழ்ச்சி.
இந்த விழாவில் மக்கி ஆலிம் அறக் கட்டளையினர் அனுசரணை செய்ததாக ஒரு தகவல் வந்துள்ளது.. அப்படி ஒரு அறக் கட்டளை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு ஆனால் மக்கி ஆலிம் குடும்பத்தினர் எல்லோரும் அதற்கு இசைவு தரவில்லை. எனவே அடியேன் தனியாகவே என்னால் முடிந்த சிறிய பரிசுகளை கொடுத்து எனக்கு ஒரு முகவரி தேடித் கொள்கிறேன் என்பதுதான்உண்மை.என்றாலும் கனவு மெய்ப்பட வேண்டும் என்று பாரதி பாடியதுபோல் எனது மக்களுடன் சேர்ந்து மக்கி ஆலிம் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்ற அவா இருக்கவே செய்கிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பை படிக்கும் எனது மக்கள் அதற்கு பச்சை கொடி காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.
நிகழ்ச்சிகள் நேரலை செய்யப் பட்ட தகவல் இல்லையே....அடுத்து வரும் ஆண்டுகளில் அதை செய்ய இந்த விழாக் குழுவினர் முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்கள் வெற்றிக்கு முயற்சித்தவர்கள் எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross