செய்தி: மழலையர், பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழு! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..AIRCONDITIONED CITY posted bymackie noohuthambi (kayalpatnam)[22 December 2017] IP: 27.*.*.* India | Comment Reference Number: 45950
பெங்களூரை நினைத்தாலே நினைவுகள் பசுமையாகின்றன. ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு குளிரூட்டப்பட்ட நகரிலே காலடி எடுத்து வைத்துள்ள பசுமையான நினைவுகள் நம்மை வந்து சூழ்ந்து கொள்கிறது.
அது சுகமான பயணம். சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றபோது நமது நினைவில் வாழும் ஆடிட்டர் புகாரி அவர்கள் காயல்பட்டினம் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் கொடுத்துள்ள இல்லத்தை பார்த்தேன் அங்கு தங்கினேன்.
இறை இல்லம் ஒன்று
மக்தப் இன்னொன்று
நமது மக்கள் வேலை தேடி செல்பவர்கள் தங்கும் இடம் ஒன்று.
அந்த தாயுள்ளம் ஆடிட்டர் புகாரி அவர்களின் துணைவி என்னிடம் சொல்லி வருத்தப் பட்ட செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.
இங்கு தங்கி வேலை தேடும் நமதூர் இளைஞர்கள் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும். அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை நானும் அதை நேரில் பார்த்தேன், தொழுகைக்கும் அங்கு தங்கியிருக்கும் நேரத்தில் அவர்கள் ஜமாத்தில் கலந்து கொள்வதில்லை என்ற கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
பெங்களூர் காயல் நல மன்ற உறுப்பினர் எனது பாசத்துக்குரிய ஷேய்க் அப்துல்லாஹ் ஹாபிஸ் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். இங்கு தங்கும் மாணவர்களின் ஈமெயில் id உங்கள் கையில் இருக்க வேண்டும். தினமும் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் அசைவுகளை கண்காணிக்க வேண்டும். அவர்களும் அன்றாட எங்கே சென்றேன் என்ன நேர்காணல் நடந்தது என்று உங்களிடம் அறிக்கை தரவேண்டும். அப்போதுதான் பெருந்தகை புகாரி அவர்கள் நமது மக்களுக்காக செய்துள்ள உதவியின் மகத்துவத்தை உணர முடியும்.
ஏதோ வந்தோம் ஜாலியாக கட்டணமின்றி பெங்களூரில் பொழுதை களித்தோம் அனுபவித்தோம் சென்றோம் என்று இருக்க அவர்களை அனுமதிக்காதீர்கள் என்று சொன்னேன்.
THERE IS NO SUBSTITUTE TO HARD WORK என்பதை அவர்கள் உணர வேண்டும். கணினி நகர் என்று பெங்களூருக்கு இன்னொரு பெயர் உண்டு உலகம் முழுவதும் பெங்களூர் நோக்கி பயணிக்கிறது கணினி மென்பொருளுக்காக அங்கே பயின்றவர்கள் தங்கள் நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.
HONEYWELL இப்ராஹிம் அவர்கள் நமதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஏழ்மையில் பிறந்து வளர்ந்து பின் எட்டிப் பிடித்த சிகரத்தை பற்றி பேசிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். அவர் நமதூர் மக்களுக்கு உதவி செய்வதற்கு எல்லா வாசல்களையும் திறந்து கொடுத்தார்கள். நமது மக்கள் அவர்களை பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது கண்கள் பனிக்கின்றன இதயம் இனிக்கிறது. ஆடிட்டர் புகாரி அவர்களின் நல்ல எண்ணத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் அவர்கள் இல்லத்தை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி நாம் பயன்படுத்த தவறினாலும் அல்லாஹ் அவர்கள் எண்ணத்துக்குரிய நற்கூலியை வழங்கி கொண்டே இருக்கிறான். சதக்கதுன் ஜாரியா வாக அந்த இல்லம் விளங்கி கொண்டிருக்கிறது.
ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்.
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்.
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ புகழை வாங்க வந்தார்
இதயம் என்பதை விலையாய் கொடுத்து
அன்பை வாங்கிட எவருமில்லை என்று ஒரு கவிஞன் பாடுகிறான்.
ஆடிட்டர் புகாரி அவர்களின் இல்லம் நமக்காக திறந்திருக்கிறது காயல் நலமன்றம் நமக்கு வழி காட்ட காத்துக் கொண்டிருக்கிறது. நமது இளைஞர்கள் கணினி உலகத்தில் தடம்பதித்து சாதனை செய்வதற்கு பதிலாக அந்த கணினியில் முக நூலில் முகம் புதைத்துக் கொண்டு வாட்டசுப்பில் தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் வைரலாக வைரஸாக பரவவிட்டு கொண்டு தங்கள் இளமையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல ஒரு நிகழ்ச்சி இங்கே நடை பெற்றிருக்கிறது. இனிமேலாவது நமது இளைஞர்கள் இந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்ற பாதையில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 2018 இன்னும் சில நாட்களில் பிறக்கப் போகிறது. நாளை விடியும் பொழுது நல்ல பொழுதாக இருக்க வாழ்த்துக்கள்.
மலச்சிக்கல் இல்லாமல் பொழுது விடுகிறதா
மனச்சிக்கல் இல்லாமல் பொழுது முடிகிறதா
பணச்சிக்கல் இல்லாமல் பொழுது நகர்கிறதா..
அல்ஹம்து லில்லாஹ். இவை நமது வாழ்வில் முக்கியமான செய்தி அதையும் இங்கே மருமகன் ஸாலிஹ் அவர்களும் மருத்துவர் அவர்களும் விளக்கி இருக்கிறார்கள் அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross