Re:...யானை வாரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே posted bymackie noohuthambi (kayalpatnam)[21 July 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46222
யானை வரும் முன்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள். யானை எங்கிருந்து வந்தாலும் அதற்கு முன்னால் ஒரு மணி ஓசை வரும் அதே போல் நாளை மின்தடை என்றால் அதற்கு முன்னாலே இணையதளங்களில் அந்த செய்தி வந்து விடுகிறது. நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க அது உதவுகிறது.
சமீப காலமாக இணையத்தளத்தில் அந்த செய்தி வரும் முன்னே முந்தின நாளே இருள் கவ்விக் கொள்கிறது. இரவு பத்து மணிக்கெல்லாம் மின் தடை ஆறாம்பித்து விடுகிறது இன்று இரவும் அப்படி ஒரு நிகழ்வுதான் நடந்தது.
குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் நோயாளிகள் என்று பல தரப்பட்ட மக்களும் இந்த மின்தடையை எப்படி பார்க்கிறார்கள். அவர்கள் மின்வாரியத்தையும் அதில் பணிபுரிபவர்களையும் சபிக்கிறார்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். பாவம் அவர்களும் மனிதர்கள்தானே.... என்று நாம் சொன்னால் நாளை மின்தடை என்று அறிவித்து விட்டு இன்று இரவே அந்த மின்தடையை அமுல்படுத்திவிடுகிறார்களே என்ன நியாயம் என்று அவர்களிடமிருந்து பதில் வருகிறது.
இதற்கு மாற்று ஏற்பாடே இல்லையா...தமிழகம் .மின்மிகு மாநிலமாக இருக்கவேண்டாம் குறைந்த பட்சம் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக மின்தடை செய்யாத மாநிலமாக இருக்க வேண்டாமா,,,வெளிநாடுகளில் இந்த நிலை இல்லையே ஏன் அது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross