Re:...பெற்றோர்க்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக posted bymackie noohuthambi (kayalpatnam)[03 August 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46233
இஸ்லாமிய சூழல்கள் முற்றிலும் நிறைந்து காணப்படும் நமது ஊரில் வைகறைப் பொழுதில் தாய்மார்கள் தங்கள் சின்னஞ்சிறிய குழந்தைகளை எழுப்பிவிட்டு தலைவாரி பளிச்சென உடை அணிவித்து காலை உணவு அளித்து பகல் உணவை டப்பாக்களில் வைத்து தெருவுக்கு கூட்டி வந்து அவர்கள் எதிர்பார்க்கும் xxxxxx பள்ளிக் கூடத்து வாகனம் வந்ததும் மகிழ்ச்சி பொங்க தங்கள் பிள்ளைகளுக்கு டாட்டா சொல்லி ஆங்கிலக் கல்வி மோகத்தில் அவர்களை அனுப்பி வைக்கும் அவல நிலையை இன்றும் கூட நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.
எத்தனையோ ஆங்கில கல்வி பள்ளிக் கூடங்கள் நமதூரிலே பெருகி விட்ட பிறகும் கூட இந்த நிலை இங்கு.
ஆனால் லண்டன் அமெரிக்கா போன்ற இஸ்லாமிய வெறுப்பு சக்திகள் நிறைந்து காணப்படும் நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய சூழல் மிக்க குறைவாக உள்ள இடத்தில இப்படி இளஞ்சிறுசுகள் மார்க்கக்கல்வி கற்று திருமறையை இளம் வயதிலேயே பாராயணம் செய்து பரிசுகளும் வாங்குகிறார்கள் என்றால், இதில் மறைந்துள்ள ஒரு பெரிய ரகசியம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பிள்ளைகளின் அதீத வளர்ச்சிக்கு வித்திட்டு நிற்பது அவர்கள் பெற்றோர்களின் கடுமையான பயிற்று வித்தலும் இஸ்லாமிய மார்க்க நெறியிலே தங்கள் பிள்ளைகள் வார்த்தெடுக்கப் பட வேண்டும் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்ற உந்துதல்தான் காரணியாக இருக்கிறது.எனவே இந்த சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள பெற்றோர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். இந்த பெற்றோர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்று து ஆ வும் செய்வோம்.
சுமார் 30 40 ஆண்டுகளுக்கு முன்னால் லண்டன் அபூபக்கர் ஹாஜி அவர்கள் மக்களாகிய ஜியாத் முஹம்மது அலி ஆகியோர் அவர்கள் தந்தையுடன் பம்பாய் வந்தபோதும் இந்த பிள்ளைகள் லண்டனில் இருந்து வாழ்ந்து கொண்டு இஸ்லாமிய விழுமியங்களை தங்கள் வாழ்வியலுடன் இணைத்துக் கொண்டிருப்பதை நான் கண்டு ஆச்சரிய பட்டேன். அப்போதும் இவர்கள் பெற்றோர்கள்தான் இந்த பிள்ளைகளை இப்படி வளர்க்கிறார்கள் வார்த்தெடுக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தது.
எனவே பெற்றோர்கள் மனம் வைத்தால் அவர்கள் பிள்ளைகளை எந்த சூழ்நிலைகளையும் தங்கள் கொள்கை கோட்பாடுகளுக்கு சாதகமாக வளர்க்க முடியும் என்ற உண்மையை இவர்கள் நமக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறார்கள்.
இந்த செய்தி வெறும் இணையதளங்களில் மட்டும் சொல்லப் பட வேண்டிய செய்தி அல்ல. நமது தாய்மார்களின் இல்லக் கதவுகளை தட்டி சொல்லப் பட வேண்டிய செய்தி அவர்கள் உள்ள கதவுகளை அல்லாஹ் திறந்து விடுவான்.
ஒரு விடியல் பிறக்கும் நமதூரில் இத்தகைய மாற்றம் பிறக்கும் மக்தப்கள் மார்க்கக் கல்வி நிலையங்கள் பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, இந்த சின்னஞ்சிறுசுகளுக்கும் மிக அவசியம்.
அல்லாஹ் நம் எல்லோருக்கும் இந்த பெற்றோர்களின் சிந்தனையை உண்டாக்குவானாக. நமது பிள்ளைகளும் இந்த சாதனைகளை எட்டிப் பிடிக்க அருள்புரிவானாக. இந்த மழலைகளுக்கும் நமது வாழ்த்துக்களையும் து ஆ க்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross