Re:...நிறைவுரை அல்ல அது, மன நிறைவுரை posted bymackie noohuthambi (colombo)[06 January 2019] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46358
அவசர அவசரமாக வந்து மடிக் கணினியை திறந்து நேரலையை கண்டு கேட்டு மகிழ முற்பட்டபோது ''நிறைவுரை ஆற்ற வாருங்கள்'' என்று ரஷாதி அவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்த போது அந்த வெண்தாடி வேந்தர் மேடைக்கு வந்து தனது நிறைவுரையை நிகழ்த்தும் போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட அவர்களுக்கு நேரம் கூடுதலாக தருவதாக விழாக்குழு சகோதரர் அறிவித்தபோதும் அவர்கள் மறுத்து விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் நின்று தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் கனகச்சிதமாக பேசி முடித்தார்கள், அந்த பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எல்லா பேச்சாளர்களும் இப்படி தங்கள் தலைப்பையும் நேர மேலாண்மையையும் சரிவர கடைபிடித்தால் யாருக்கும் சலிப்பு தட்டாது. அல்ஹம்து லில்லாஹ்.
அவர்கள் சொன்ன செய்தியில் நபிகள் நாயகம் அவர்கள் புன்முறுவல் பூத்தபோது ''ALLAAHUMMA SINNAKA YAA RASOOLULLAAH'' என்று உமர் றழியல்லாஹுத்த ஆலா சொன்னபோது அவர்கள் மட்டுமா சொன்னார்கள் நாமும் சேர்ந்தே சொன்னோம். அல்லாஹ் எப்போதும் உங்களை நம்மை எல்லோரையும் இந்த புன்சிரிப்போடு வாழ வைப்பானாக. புகாரி ஷரீபில் இடம் பெறும் இந்த ஹதீதை என்றோ நான் படித்த ஞாபகம். ஆனால் சம்பவம் நடை பெற்ற இடம் எனது மனக் குறிப்பில் இல்லை.
நம் வீட்டில் எல்லோரும் இப்படி புன்சிரிப்போடு இருந்தால் வாழ்வு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.உன் சகோதனை பார்த்து புன்முறுவல் பூப்பதும் ஒரு ஸதகா என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை நான் இந்த நேரத்தில் நினைத்து பூரிப்படைகிறேன்
ALLAAHUMMA SALLI ALAA MUHAMMADHIN VA ALAA AALI MUHAMMADHIN VABAARIKA VASALLIM ALAIHI
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross