Re:...அல்லாஹ்வை தொழுகை பள்ளிவாசலுக்கு வாருங்கள் என்று அழைத்தவரை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் posted bymackie noohuthambi (kayalpatnam)[02 June 2019] IP: 223.*.*.* India | Comment Reference Number: 46417
ஒரு மாணிக்க வியாபாரியின் குடும்பத்தில் பிறந்த ஹிஷாம் அவர்கள் தனக்கென்று ஒரு வித்தியாசமான வியாபாரத்தை தேர்ந்து எடுத்துக் கொண்டார் . அந்த தொழிலில் நஷ்டம் என்பதே இல்லை என்று அல்லாஹ் சொல்வதை நம்பி அதையே தன் வாழ்நாள் தொழிலாக ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வுக்காக பணி புரிந்தார். செல்லுமிடங்களெல்லாம் அவர் எல்லோரையும் வேண்டிக் கொள்வது ''கொஞ்ச நேரம் எங்களுடன் பள்ளிவாசலுக்கு வாருங்கள் அல்லாஹ் ரசூல் சொல்லியுள்ளவைகளை பற்றி சற்று பேசுவோம் நினைத்து பார்ப்போம் '' என்று அழைப்பார்.
அவர் முகம் என்றும் சிரித்த முகமாவே இருக்கும் அழைப்பு பணியில் அவர் வெற்றி கண்டதும் அந்த புன்னகை முகத்தினால்தான் .
நாங்கள் அவருடன் அவர் வாப்பாவுடன் இலங்கையில் இருந்த காலத்தில் மாணிக்க வியாபாரத்தில் சுறுசுறுப்பாக இருந்ததை போலவே அல்லாஹ்வுக்காக மக்களை அழைக்கும் பணியிலும் அவர் சுறுசுறுப்பாகவே காணப் பட்டார் அல்லாஹ்வின் விருப்பம் அவர் ஆற்றிய பணிகள் போதும் என்று நினைத்து அவரை தன் பக்கம் அழைத்துக் கொண்டான் .
அவரைப் போலவே அவரது ஒற்றை மகனும் அவரது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் ஆனாலும் அவர் உலகக் கல்வியிலும் ஒரு மைல் கல்லை தொட்டு அந்த பணியிலும் வெற்றிகரமாக வீறு நடை போடுகிறார் அல்ஹம்து லில்லாஹ் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்தருள்வானாக அவரது நல்ல அமல்களை பொருந்திக் கொள்வானாக அவரது மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவருக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross