செய்தி: அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்தில் எழுத்தாளர் சாளை பஷீர்-இன் கதை ஒலிபரப்பு!! காலம் & அலைவரிசை விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..''.மண் மிட்டாய்'' தந்த மண்ணின் மைந்தன் வாழ்க ! posted bymackie noohuthambi (kayalpatnam)[03 March 2020] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46498
மர்ஹபா ....மர்ஹபா ..சாளை பஷீர் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக .மிட்டாய் என்று தாளில் எழுதினால் இனிக்குமா..இனிக்கிறதே எப்படி?.
''தேன் என்ற சொல் தித்தித்திடுமா என்றும் தேள் என்ற சொல் கொட்டிவிடுமா.?'' என்று ஒரு பாடல் நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் மண் மிட்டாய் என்று பெயரிட்டு அது அகில இந்திய வானொலி வரை சென்று தமிழக மக்கள் மனங்களை இனிக்க செய்திருக்கிறது என்றால் அந்த சொல்லுக்கு இனிப்பு வடிவம் கொடுத்த ஷாளை பஷீர் அவர்களை இந்த ஊரே வாழ்த்த கடமை பட்டிருக்கிறது.
தமிழ் மணக்கும் சோலை எல்லாம் தேடினேன் உன்னை
சான்றோர் தம் அவையெல்லாம் அலைய விட்டேன் கண்ணை ..என்று பேரறிஞர் அண்ணாவை அங்குமிங்கும் தேடிய இசை முரசு நாகூர் ஹனீபா இப்போதிருந்தால்....பிறைகொடியான் மஹ்மூது ஹுசைன் இப்போது இருந்திருந்தால் ....சாளை பஷீர் அவர்களை கவிதையால் புகழ்ந்திருப்பார்கள்.ஆனால் என் போன்றவர்களுக்கு அந்த திறமை சூனியமாக இருப்பதால் ஷாளை பஷீர் அவர்களை உளமார வாழ்த்துகிறேன் அவர்கள் தமிழ் சேவை தொடரட்டும்.
நமதூர் பாரம்பரிய மிக்க கவிஞர்களை பெற்றெடுத்த ஊர்...வரகவி புலவருக்கு விழா எடுத்தபோது அப்துஸ் சமத் அவர்கள் சொன்னார்கள்...''காயல்பட்டினம் வரகவியை மட்டுமா பெற்றிருக்கிறது வரையற்ற கவிஞர்களையல்லவா பெற்றிருக்கிறது'' என்று சொன்னார். ஒரு படி மேலே சென்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொன்னார்கள் ''காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் கல்லும் கூட கவி பாடும் கவிஞர்கள் வந்திருக்கிறோம் காவியங்கள் பிறக்காதோ'' என்று சொன்னார்.
சமீப காலத்தில் இப்படி ஒரு மிட்டாய் கதை வந்ததில்லை. அதுவும் மண் மிட்டாய் ஆச்சரியமாக இருக்கிறது துரதிர்ஷ்ட வசமாக இன்று மதிய வேளையில் தான் இந்த பதிவை பார்த்தேன்.மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் வேட்கை எனக்கு புரிகிறது. ஆனால் இந்த மண் இப்படிப்பட்டவர்களை வாழ்த்துவதற்கும் அவர்களுக்கு அங்கீகாரம் தருவதற்கும் ஏனோ தயங்குகிறது.
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே இருந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மைகள் உண்டோ அவற்றை தேடித் பெறுவதே நமக்கு மகிமை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross