நீதிக்கு மரியாதை! posted bykavimagan (dubai)[09 July 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5858
சட்டமும்,நீதியும் எல்லோருக்கும் பொதுவானது என்ற
நண்பரின் கருத்து ஏற்புடையதே! ஒருசில விவரங்களை
மாத்திரம் இங்கே சுட்டிக்காட்டுவது அவசியமானது!
ஓர் அரசு மற்றொரு அரசு அல்லது அதன் தலைவர் மீது
துறைரீதியாக தொடுக்கும் வழக்குகளை,குற்றம்சாட்டப்பட்ட
அரசு ஆட்சிக்கு வரும்போது வாபஸ் வாங்கிவிடுவது
வழக்கம்.அப்படி கருணாநிதி அரசால் ஜெயலலிதா மீது
தொடுக்கப்பட்ட வழக்குகள் பதின்மூன்று.அதில்,பன்னிரண்டு
வழக்குகளை சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொண்டு,
நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.ஒரே ஒரு வழக்கு
மாத்திரம் பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கிலுமகூட,தமிழரான ஜெயலலிதாவை
இழிவுபடுத்தும் வகையில் கன்னட மொழியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை எதிர்த்துப் போராடி,தன
தாய்மொழியில் அதை பெறுவதற்கான அவரது முயற்சியினால் காலதாமதம் ஆனது.அது சட்டம் அவருக்கு
அளித்துள்ள உரிமை.
அதே நேரம் ஜெயலலிதா அரசால் தொடுக்கப்பட்ட எட்டு
வழக்குகளுள் நான்கை,கருணாநிதி என்னும் சூரப்புலி
தனது ஆட்சிக்காலத்தில்,புனையப்பட்ட வழக்கு என்ற பெயரில்
வாபஸ் வாங்கிக்கொண்டது வரலாறு.
நீங்கள் குறிப்பிடும் பஸ் எரிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு
என்ன தொடர்பு? அநியாயமான முறையில் கல்லூரி மாணவியரை கொன்ற குற்றவாளிகள் தூக்குத்தண்டனையை
எதிர்நோக்கி இருக்கின்றார்கள். அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள்.
எது எப்படியோ? யாராக இருந்தாலும் நீதிக்கு தலைதாழ்த்தியே
ஆகவேண்டும். குற்றம் செய்யும்பட்சத்தில் ஜெயாவும்
விதிவிலக்கல்ல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross