Re:“சேவைச் செம்மல்” விருது ப... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah.)[25 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6408
எப்போதும் மேலேயே இருந்திருக்கின்ற கரங்கள், இன்றுதான் தாழ்திருக்கின்றது, இந்த தாழ்வு மேன்மையால் வந்த தாழ்வு.
ஆமாம் எப்போதும் மேடைகளில் எல்லோரையும் வாழ்தியும், விருதுகள் வழங்கியும் சிவந்த கரங்கள் இன்றுதான் முதன்முறையாக தாழ்திய கைகளால் ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது.
பொதுவாக முதல்வர் அல்ஹாஜ். நூருல்ஹக் நுஸ்கி அவர்களை சமுதாயம் ஒரு நிறுவனத்தின் முதல்வராக மட்டுமே அவர்கனை பார்த்துள்ளது,
அவருடைய தனிப்பட்ட வாழ்வு,
தயாள குணம்,
எப்போதும் தூய்மை பேணும் ஒழுக்கம்,
எந்த நிiலையிலும் வார்த்தை பிரலாது பொறுமை காணும் பேச்சு,
காhpயத்தில் எப்போதும் நடுநிலை பேணும் பேனிக்கை,
தனது எந்த வலிகளையும் வெளிகாட்டாத பாங்கு,
தான் தலைவர் என்ற நினைப்பில் தானாகவே எந்த முடிவையும் எடுக்காது எல்லோரோடும் கலந்தாலோசித்தே தீர்வுகளை காணும் நாகாpகம்,
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,
அவர்களோடு நாங்களும் சேர்ந்து பணியாற்றுகிறோம் என்று சொல்பவர்களும், நினைப்பவர்களும் அவர்களுடை அத்துனை நல்ல பண்புகளை பெற்றிட முயலவேண்டும், தன்னலமற்ற சேவை செய்திட தங்களை தாயர்படுத்திட வேண்டும், கற்றிடவேண்டும்.
ஸபையில் எப்போதும் கண்டிப்பு காட்டும் அவர்களை பயந்து அவர்களை விட்டும் சற்று விலகியிருக்கும் மாணவர்களும் வெளியு+ருக்கு பைத்திற்காக செல்லும்போது அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் (அல்லது அஹ்மத் ஆலிம் அவர்கள் வரவேண்டும்) என எதிர்பார்ப்போம், காரணம் வெளியு+ர் பயணங்களில் அவர்களும் சிறுவர்களாகி எங்கலோடு சாpசமமாக பழகுவார்கள், முக்கியம் மாணவர்களுடைய வயிற்றை காயவிடமாட்டார்கள், போகுமிடத்திலெல்லாம் எதையாவதை வாங்கி தந்து கொண்டேயிருப்பார்கள்.
வண்டிமாடு தண்ணீர்துறையை கண்டால் தானாக நின்றுவிடுவதுபோல் பைத்திற்கு சென்றுதிரும்போது குரும்பு+ர் வந்துவிட்டால் எங்களது வாகனம் ஓட்டுனர் பிரேக்கை மிதிக்காமலே தானாக நின்றுவிடும், அங்கிருக்கின்ற பழரசக்கடையில் பழச்சாறு குடிக்க வேண்டி, அதற்கு அவர்கள் வைத்திருக்கின்ற பேர் “கஞ்சி”,
மாணவர் தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுப்பி அவனையும் “ அட வாப்பா எழும்பு கஞ்சி குடி” என்பார்கள்,
இப்படி எத்தனை எத்தனையோ மறக்க இயலாத, மறக்க நினைக்காத எத்தனை நிகழ்ச்சிகள்.
ஆரம்பத்தில் அவர்கள் செய்துகொண்டிருந்த வியாபாரத்தால் நல்ல சம்போத்தோடு இருந்தவர்கள், ஸபைக்காக வேண்டியே தனது உலகை சுறுக்கிக்கொண்டு ஒரு கூண்டில் தன்னை தானாகவே அடைத்துக் கொண்டார்கள், எங்களது விருப்பம் மீண்டும் தனது தேர்ந்த அனுபவத்தால் முந்தய வியாபாரத்தை அவர்கள் தொடங்கிட வேண்டும், அதன்மூலம் எல்லா தேவைகளையும் நிறைவேற்றிட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புhpவானாக.
சமுதாயத்தில் பல அறிஞர்கள் வருவார்கள், பல சிந்தனையாளர்கள் வந்து கொண்டுதானிப்பார்கள், ஆனால் தன்னலம் பாராது உழைக்கும் மனம், குணம் ஒருசிலருக்குதான் வரும் அப்படியானவர்களில் உட்பட்டவரான எங்கள் முதல்வர் அவர்கள் தங்களது வாழ்வை அவர்கள் விரும்புகின்றவாரே அமைத்திட அல்லாஹ் அருள்புhpவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross