செய்தி: ஜாவியா ரமழான் பயான்கள் - நாள் 7! ஃபாரூக் ஆலிம் உரைநிகழ்த்துகிறார்!! 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜாவியா ரமழான் பயான்கள் - ... posted bymackie noohuthambi (kayalpatnam)[09 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6738
கண்ணியம் மிக்க உலமாக்களுக்கு அல்லாஹ ரஹ்மத செய்வானாக. புனித ரமளானில் எல்லா இடங்களிலும் சஹ்று நேர ஒலிபரப்பு நடக்கிறது. சஹ்ருடைய நேரம் மிகவும் பெறுமதியானது என்று உலமாக்கள் சொல்லும் செய்தி இந்த நேரத்தில்தான் தொலைகாட்சி மூலம் ஒளிபரப்பப்படுகிறது.அந்த நேரத்தில் எழுந்து தஹஜ்ஜத் தொழுவது குர் ஆண் ஓதுவது, துஆக்கள் கேட்பது பல்லாயிரம் நன்மைய்களை தரும் என்று சொல்லும் உலமாக்களின் பிரசங்கத்தை மக்கள் இந்த நேரத்தில் தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்களே தவிர, இவைகளை செயலில் கொண்டு வருவதில்லை.
தவ்ஹீத் ஜமாஅத் ஆகட்டும் தப்லீக் ஜமாஅத் ஆகட்டும், சுன்னத் ஜமாஅத் ஆகட்டும், இன்னபிற இஸ்லாத்தில் உள்ள பல்வேறு பிரிவு ஜமாத்கள் எல்லோரும் இந்த பெறுமதியான நேரத்தை தொலைக்காட்சியில் வீணாக கழிக்க துணை போவது சரிதானா. புனித லைலதுல் கதர் 1000 மாதங்களை விட சிறந்தது என்று அல்லாஹ சொல்வதை எல்லா உலமாக்களும் சொல்கிறார்கள். ஆனால் அந்த இரவு எவ்வாறெல்லாம் வீணடிக்கப்படுகிறது எவ்வளவு மக்கள் அதை தொழுகையை கொண்டும் குர் ஆண் ஒதுவதைக்கொண்டும் கழிக்கிறார்கள் என்பதை எனதருமை உலமாக்களே, சற்று சிந்தித்துப்பாருங்கள்.
நீங்கள் நினைத்தான் இந்த தொலைகாட்சி நிகழ்சிகளை நிறுத்தி, அல்லாஹுடன் தொடர்புகொள்ளும் வழிகளை மக்களுக்கு அமைத்துக்கொடுக்க முடியும், நபிகள் நாயகம் அவர்கள் மீது எத்தனை ஆயிரம் சலவாத்துகள் சொல்ல முடியும். இந்த மறுமலர்ச்சியை புரட்சியை உங்களால்தான் செய்யமுடியும். மக்களை பிரிப்பதையும் இணைப்பதையும் அல்லாஹ் உங்கள் கையில் தந்துள்ளான். குர் ஆண் ஹதீஸ் மூலம் இந்த நல்ல மாற்றத்தை ஏற்படுத்துங்கள். சஹர் நேர ஒளிபரப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று எல்லா ஜமாஅத் ஆலிம்களையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ தவ்பீக் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross