குரங்கும்,குருவியும் . posted bykavimagan (dubai)[10 August 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6779
ஓர் அடிப்படை உண்மையை விளங்காமல், எனது கருத்தையும்
சரியாகப் படித்துப் பார்க்காமல் தானும் குழம்பி மற்றவர்களையும்
குழப்புகின்ற நண்பர் முஹம்மத் ஆதம் சுல்தான் அவர்களே!
ஜெயலலிதா சமச்சீர் கல்விக்கான கொள்கைத் திட்டத்திற்கு எதிராக
நீதிமன்றம் சென்றாரா? அல்லது அ.தி.மு.க.உட்பட ஏராளமான
இயக்கங்கள் ஐம்பது ஆண்டுகாலம் கோரிய ஒரு திட்டத்தில், தனது சொந்த கதைகளை புகுத்திய கருணாவின் பாடத்திட்டங்கள் தரம் குறைந்தது என்றும், அதனால் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு
சிறந்த பாடங்களுடன் முறையாக சமச்சீர் கல்வி அமுல்படுத்தப்
படவேண்டும் என்று நீதிமன்றம் சென்றாரா? கடந்த இரண்டு மாத
செய்தித் தாள்களை புரட்டிப் பாருங்கள்.
நீதிமன்றத்தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்று
உச்சநீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கும் போது தங்களுக்கு
என்ன பிரச்சனை? சாபானு வழக்கும், அலஹாபாத் தீர்ப்பும்
எவ்வளவு பெரிய விமர்சனத்தையும், எதிர்ப்புகளையும் சந்தித்தது
என்பதை தாங்கள் அறிவீர்களா? முல்லைபெரியார் மற்றும் காவிரி
பிரச்சனையில் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் நீதிமன்றத்
தீர்ப்புகளை தங்களது மாநிலத்தின் நலனுக்கு எதிரானது எனக்கூறி
தூக்கி வீசியது வரலாறு இல்லையா?
நாங்களெல்லாம் இடம்பெறு குழு நம்பகத்தன்மையாக இருக்க
முடியாது என்ற தங்களது கருத்தைப்பற்றி எனக்கு கொஞ்சமும்
வருத்தம் இல்லை. காரணம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக
நான் இடம்பெற்றிருந்த குழுக்கள், நகர மக்களுக்கான களப்பணியில் எப்படியெல்லாம் செயலாற்றியது என்பதை, அந்தந்த குழுவில் இடம் பெற்றிருந்த நண்பர்களும் நல்லவர்களும் அறிவார்கள். அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே!
வாஹித் காக்கா! முறையான, நெறிபடுத்தப்பட்ட, முத்துக்குமரன்
கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட நூற்றி நான்கு குறைகளும் களையப்பட்ட சமச்சீர் கல்வியை ஆதரிக்கின்றேன். எனது கடந்தகால பதிவுகள படித்துப் பாருங்கள். நன்றி!
அறிந்தோ,அறியாமலோ குரங்கு மற்றும் குருவி கவிதையை எழுதி எனது வாதத்திற்கு வலுசேர்க்கும் நண்பருக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross