Re:ரமழான்-1432: குட்டியாபள்ள... posted byS.H. Abdul Cader (Jeddah)[24 August 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7165
குட்டியப்பாப்பள்ளி என் வாழ்வில் மறக்கமுடியாத பல நினைவுகளை தாங்கி நிக்கிறது. பள்ளி பருவத்திலே மரைகார்பள்ளி தெரு நண்பர்களுடன் சேர்ந்து நண்பன் உமர் சாஹிப் தலைமைல் 1976 ஆம் ஆண்டு அப்பள்ளி சென்று சுத்தம் செய்து நோன்பு காலத்தில் ஐவேளை தொழுகையுடன் தராவிஹும் தொழவைதோம். அந்த காட்டு பகுதிக்கு கையில் பெட்ரோமாக்ஸ் லைட் கொண்டு
பயம் மனதை கவ்வ ஒருவித தைரியத்தை ஓதி வரவழைத்து ஒருவர் பின் ஒருவராக செல்வோம் . அங்குதான் நாங்கள் தொழ வைக்க கற்றுகொண்டோம்.
நோன்பு 27- இல் தமாம் சாப்பாடு வைத்து இந்த சிறுவர்களின் அழைப்பை மதித்து மர்ஹும் சாவன்ன ஆலிம் அவர்கள் வந்து சிறப்பிக்க உண்டுமகிந்தோம் .
.பல மாதம்கள் அப்பள்ளி எங்களின் பராமரிப்பில் இருந்தது. மாலைபோலுதினில் அங்குசென்று விளையாடிவிட்டு
மக்ரிப் தொழுகை நிறைவேற்றி திரும்புவோம் ' காட்டு பள்ளி திறக்கப்பட்டு தொழுகை நடத்தினார்கள் ' என்ற நல்ல செய்தி ஒருநாள் மாலைமுரசு பத்திரிகையில் வெளிவந்தது.
பிறகு ஒருமரத்து பறவையாக இருந்த நண்பர்கூட்டம் இரைதேடி பிரிந்ததால் இன்றுவரை ஒன்றாக சந்தித்து மலரும் நினைவுகளை அசைபோட முடியாதது வருத்தமாக உள்ளது. இன்று இந்த பள்ளயின் படம்கள் தேசம் பிரிந்து வாழும் என் இனிய நண்பர்களுக்கு நினைவை தூண்டும் என நம்புகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross